மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

ஐஜி செந்தாமரைகண்ணன் பணியிட மாற்றம்!

ஐஜி செந்தாமரைகண்ணன் பணியிட மாற்றம்!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக இருந்துவந்த ஐஜி செந்தாமரைக்கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கைவிரல் ரேகை பிரிவு சப்இன்ஸ்பெக்டர் பணி தேர்வு தொடர்பாக அருணாச்சலம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், உரிய விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதன் அடிப்படையில் சென்னை ஐஐடி பேராசிரியர் டி.மூர்த்தி என்பவரின் பெயரில் அறிக்கையைத் தாக்கல் செய்தது

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்.

ஆனால், இந்த அறிக்கை போலியானது என்றும், டி.மூர்த்தி என்ற பேராசிரியர் சென்னை ஐஐடியில் பணியாற்றவே இல்லை என்றும் அருணாச்சலம் தரப்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக, சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக இருந்த ஐஜி செந்தாமரைக்கண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். உளவியல் நிபுணரான ஜி.வி.குமார் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகராக இருப்பதாகவும், அவர் தான் ஐஐடி பேராசிரியர் என்று டி.மூர்த்தியை அறிமுகம் செய்து அறிக்கை பெற்றுத் தந்ததாகவும், ஜி.வி.குமாரும் டி.மூர்த்தியும் சேர்ந்து சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தை ஏமாற்றியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது உயர் நீதிமன்றம்.

இந்த நிலையில், இன்று (மே 15) தமிழக உள் துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதில், சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக இருந்த ஐஜி செந்தாமரைக்கண்ணன் மாற்றப்படுவதாகவும், புதிய உறுப்பினர் செயலராக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019