மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

தமிழ்நாட்ல ஒன்லி வாட்டர் வார் தான்: அப்டேட் குமாரு

தமிழ்நாட்ல ஒன்லி வாட்டர் வார் தான்: அப்டேட் குமாரு

ஃப்ரெண்டு ஒருத்தன் டீக்கடைல ரொம்ப சோகமா உக்காந்து மொபைலை நோண்டிகினு இருந்தான். வாட்ரா மேட்டரு, ஏன் சோகமா இருக்கன்னு கேட்டதுக்கு, சொந்தக்காரங்க வர்றாங்கடான்னு சொன்னான். இதுக்கு ஏண்டா கவலைபட்றன்னு கேட்டேன். பின்ன எப்டிடா மேனேஜ் பண்றதுன்னான். அதுக்கப்பறம் நடந்த பேச்சைக் கேளுங்களேன்.

மீ: என்னடா பணம் இல்லையா?

அவன்: பணம் இல்லைன்னாலும், கடைல அக்கவுண்ட் வெச்சிக்கலாம்டா.

மீ: அப்பால என்ன பிரச்னை? ஓ, வீட்ல தங்க இடம் இருக்காதுன்னு கவலைப்பட்றியா?

அவன்: கட்டில் இல்லைன்னாலும், கீழ படுத்து தூங்கிக்கலாம்டா. பிரச்னை இல்லை.

மீ: அப்பறம் என்ன தான் சார் உங்க பிரச்சினைன்னு கேட்டா...

அவன்: வீட்ல தண்ணி இல்லைடா. மத்த நாளாவது, பக்கத்து வீட்டுக்காரன், கீழ் வீட்டுக்காரன்கிட்ட ஏமாத்தி தண்ணி நிறைய புடிச்சு வெச்சு செலவு பண்ணோம். ஆனா, இப்ப என் பொண்டாட்டிக்கும், புள்ளைங்களுக்கும் தெரியாமலேயே ஆஃபீஸ் கிளம்ப கொஞ்சம் தண்ணியை ஒளிச்சு வைக்க வேண்டிய அளவுக்கு இருக்கேன். இதுல ரெண்டு பேர் வர்றாங்களாம். என்றா பண்ணுவேன் நானு?

மீ: ஆமா அந்த வீடு எவ்ளோ?

அவன்: 35 லட்சம், சென்னைக்கு மிக மிக அருகில்.

சரி நீங்க அப்டேட்டைப் பாருங்க. நான் போய் கவர்மெண்ட் பஸ் ஸ்டேண்டை தனியார் பஸ்ஸுக்கு லீஸுக்கு உட்ற மேட்டரை பாத்துட்டு வர்றேன்.

உள்ளூராட்டக்காரன்

வாங்க ஜீயர்ஸ்... நல்லாருக்கீங்களா?

கடைசியா ஆண்டாள் பிரச்சனை அப்போ பார்த்தது

புதுகை தோழன்

சண்டிகரில் நடைபெற்ற பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சார பேரணியில் பகோடா விற்ற மாணவர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

பட்டதாரிகள் பகோடா விற்பது எவ்வளவு பெருமையான விசயம் என்பதை பிரதமர் மோடி பார்ப்பதற்காக இங்கு பகோடா விற்கின்றோம் என கைது செய்யப்பட்ட மாணவர்கள் கூறி சென்றுள்ளனர்.

Mallika_N

Facebook- வரலாறு

Instagram - புவியியல்

Twitter - சமூகவியல்

நானே கண்டுபுடிச்சது..

பழைய இரும்பு கடை

தீவாராதணை காட்டுறவனையெல்லாம் தீவிரவாதியால்ல மாத்தி வச்சிருக்கானுங்க...

ரிட்டயர்டு ரவுடி

More

இங்க ரோட்டுல கொஞ்சம் பசு மாடுங்க திரியும் அதுகள எல்லாம் நைட்டு கடை அடைக்கிரப்ப கூப்புட்டு வாழ பழம் குடுத்து வாசல்ல உச்சா அடிக்க பழக்கி வச்சிருகாங்கே...

ஒரு மாடு நான் வேற மதத்து காரன்னு தெரியாம ரெண்டு நாள நம்ப கடைய ஈரம் ஆக்கிட்டு போவுது...

Kondalsamy

கரும்பு சாறு எடுக்கும் இயந்திரத்தில் அகப்பட்ட கரும்பின் நிலையும்; இந்தியாவிடம் மாட்டிய தமிழனின் நிலையும் ஒன்றுதான்.

Thirumurugan Gandhi

பாஜக குண்டர்கள் வங்கத்தின் புகழ்பெற்ற சிந்தனையாளர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். அறிவாளிகளைக் கண்டால் முட்டாள்களுக்கு கோபம் வருவது இயல்பு தானே. ஒருவேளை மேகம் மறைத்ததால் அவர் சிலை மோடி பக்தர்களுக்கு தெரியாமல் போயிருக்கும்

கோழியின் கிறுக்கல்!!

மழைக்காக ஏங்கும் கோடை கால நிலம் போல,

உன் பார்வைக்காக நான்!!!

Kondalsamy

கமண்டலஹாசனின் உளறலுக்கு மோடி டிவிட்டரில் பதில் சொல்லியிருக்கிறாராமே

ஒரு சின்ன டவுட்டு இருந்தது. இப்ப கிளியர் ஆயிருச்சி... பிஜேபியின் பி டீம்களில் முதன்மை டீம் யாருன்னு...

அங்கன யார்ரா கைய கால தூக்கிட்டு இருக்கிறது..இது இன்னொரு பி டீம்மா?

Hasan Kalifa

வளைந்து கொடுப்பதன் ஒரே பெரும்பிழை, உடைக்க முடியும் வரை வளைத்துப் பார்த்து விடுவார்கள்.

Nelson Xavier

கமல் -கோட்சே சர்ச்சை திட்டமிட்ட திரைக்கதை போலிருக்கிறது.

அரசியலிலாவது அவரது திரைக்கதை ஆஸ்கரை தொடட்டும்

mohanram.ko

தேடல் சுவாரஸ்யமானது தான், திருகாணி கீழே விழும் வரை...

ராச்

நல்லவங்களா இருக்கவேணா

நல்லவங்களா இருக்கனும்னு

நெனச்சாலே போதும்.

உமாதேவி

இறுதியாய் ஒரு சொல்

போர் நிலத்து

கடைசி பட்டாம்பூச்சியின்

வண்ணமற்ற சிறகைப்போன்றே

முடிவடைகிறது

நம் உரையாடல்

நீ இட்டத் தீயாகவும்

தீயிலிட்ட சுவையாகவும்

படர்ந்தெரிகிறது என் காதல்

மெதுமெதுவாய் செத்துப்போகிறேன்

மீண்டும் வராதே

என் பேரன்பே...

niranjan kumar

மக்கள் தலைவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருந்த அதிமுக எப்படி இப்படி ஒரு தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறது

நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் மகளுக்கு தந்தை முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை போட்டு பொலிகாளை என தலைப்பு வேறு!

அடச்சீ எத்தனை அருவருப்பான புத்தி!

SG

ஹமாம் சோப்பு போட்டா பத்து ஸ்கின் ப்ராப்ளம் வராது..

மெடிமிக்ஸ் சோப்பு போட்டா மொத்த ஸ்கின் ப்ராப்ளம் வராது..

டெட்டால் மற்றும் லைஃப்பாய் சோப்பு போட்டா கிருமிகளால் ப்ராப்ளம் வராது.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?

மனைவிக்கு சோப்பு போட்டு வாழ்ந்தா வாழ்க்கைல எந்த ப்ராப்ளமுமே வராது

-லாக் ஆஃப்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019