மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

விருதுநகர்: குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குத் தடை!

விருதுநகர்: குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குத் தடை!

விருதுநகரில் முறையான அனுமதி இன்றி செயல்படும் 21 மினரல் வாட்டர் நிறுவனங்களுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரப்பெருமாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சிவகாசி, ஆனைக்குட்டம், திருச்சுழி, அருப்புக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு (மினரல் வாட்டர்) நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 21 மினரல் வாட்டர் நிறுவனங்கள் முறையான அனுமதி இன்றி செயல்பட்டு வருகிறது. சில நிறுவனங்கள் மாவட்ட அதிகாரியிடம் அனுமதி பெற்றிருந்தாலும், அனுமதி பெற்றதற்கு அதிகமாக நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றன.இதனால் சுற்றியுள்ள கண்மாய்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மினரல் வாட்டர் நிறுவனங்களைக் கண்காணிக்கக் குழு ஒன்றை அமைக்கக் கோரியும் தமிழக அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, முறையான அனுமதி இன்றி செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (மே 15) நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் 21 தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுக்க இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை விடுமுறைக் காலம் முடிந்த பின்பு விரிவாக விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019