மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

பிக் பாஸ் 3: முதல் தகவல்!

பிக் பாஸ் 3: முதல் தகவல்!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகமான பிக் பாஸ் 3 விரைவில் வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா, ஆரவ், ரைஸா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சி மூலம் பெரும் கவனம் பெற்றனர். இரண்டாவது சீசனில் ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா, தாடி பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதல் சீசனுக்கு இருந்த வரவேற்பு ஒப்பீட்டளவில் இரண்டாவது சீசனுக்கு இல்லை என்றாலும் வெற்றிகரமான நிகழ்ச்சியாகவே தற்போது வரை அந்நிகழ்ச்சி உள்ளது. ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன.

கமல்ஹாசன் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் மக்கள் நீதி மன்ற கட்சியின் தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதாலும் கமல் இதன் மூன்றாம் பாகத்திலிருந்து விலகுவார் என செய்திகள் வலம் வரத்தொடங்கின. கமல் தொகுத்துவழங்கும் பாணிக்காகவே இதன் டிஆர்பி ரேட்டிங்க் குறையாமல் இருந்து வரும் நிலையில் இச்செய்தி பிக் பாஸ் ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியது. மேலும், நயன்தாரா தான் மூன்றாவது பாகத்தை தொகுத்து வழங்கவுள்ளார் என செய்திகள் அடிபட்டு வந்தது.

அதனை பொய்யாக்கும் வகையில், சில நாட்களுக்கு முன் கோகுலம் ஸ்டுடியோவில் பிக் பாஸ் 3 ப்ரோமோ ஷூட் நடைபெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் கமல்ஹாசன் மீண்டும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தமானதே.

தற்போது விஜய் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைதளத்தில், பிக் பாஸ் 3 விரைவில் வெளிவரும் எனக்கூறும் அதன் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. அதனால் பிக் பாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தற்போது அரசியல் களத்தில் தவிர்க்கமுடியாத பெயராக மாறி வரும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அதன் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.

பிக் பாஸ் முன்னோட்டம்

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019