மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

எரிவாயுக் குழாய் திட்டம்: இடைக்காலத் தடை!

எரிவாயுக் குழாய் திட்டம்: இடைக்காலத் தடை!

ராமநாதபுரம், தூத்துக்குடி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

ராமநாதபுரம் – தூத்துக்குடி விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதை எதிர்த்து, தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். “தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள விவசாய நிலங்கள் சிப்காட் அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. காற்றாலை, ரயில் பாதை அமைக்கவும் விவசாய நிலங்கள் அரசால் பெறப்பட்டுள்ளன.

கடந்த மே 6ஆம் தேதியன்று இந்தியன் ஆயில் நிர்வாகிகள் தெற்கு வீரபாண்டியபுரம் விவசாயிகளிடம் கையெழுத்து பெற்றனர். இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இது பற்றிக் கேட்டபோது, தூத்துக்குடியில் ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் எரிவாயு குழாய்களைப் பூமிக்கு அடியில் பதிக்கவிருப்பதாகவும், அதற்காக நிலத்தைக் கையகப்படுத்துவதாகவும் தெரிவித்தனர். இதற்காகப் பெறப்பட்ட அனுமதியில், ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலான பகுதிகள் இடம்பெறவில்லை. அனுமதி பெறாமல் தனியார் நிறுவனங்களுக்கு எரிவாயு வழங்கும் நோக்கில் இந்தியன் ஆயில் செயல்படுகிறது” என்று அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று (மே 15) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றது. அப்போது, ராமநாதபுரம் – தூத்துக்குடி விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக பெட்ரோலியத் துறைச் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைச் செயலாளர் பதிலளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019