மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க விவசாயிகளைக் காப்போம்!

பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க விவசாயிகளைக் காப்போம்!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்த மொத்த விலைக் குறியீட்டு எண் (WPI), நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (CPI) இரண்டுமே உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து சரிந்து வருவதையே காட்டுகின்றன. சென்ற ஆண்டின் ஜூலை-டிசம்பர் காலத்தில் வேளாண் பொருட்களுக்கு விவசாயிகள் பெற்ற விலை தொடர்ந்து சரிந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மறுபுறம், தாங்கள் வாங்கும் உணவுப் பொருட்களுக்கு நுகர்வோர் தரும் விலையும் அக்டோபர்-டிசம்பர் காலத்தில் தொடர்ந்து குறைந்தது.

இடுபொருள்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கிறது. வேளாண் உற்பத்தியும் தொடர்ந்து அதிகரிக்கிறது, ஆனால் சந்தையில் விளைபொருட்களின் அளிப்பு அதிகமாக இருப்பதால் அவற்றுக்கான விலை குறைகிறது. இதனால் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. விவசாயத்திற்கு தேவையான முதலீடுகளைச் செய்வதிலிருந்து அரசு விலகிக்கொள்கிறது. பல சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்கிறது. இதனால் விவசாயம் செய்வதற்கான செலவும் அதிகரிக்கிறது; குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தைப் பெறுவதும் சாத்தியமில்லாமல் போகிறது. இதுதான் இன்று நாட்டில் பெரும்பான்மை விவசாயிகளின் நிலை.

நுகர்வோர், குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் நுகர்வோர், வாங்கும் உணவுப் பொருட்களுக்கு கொடுக்கும் விலை அவ்வப்போது உயர்ந்தாலும், அவர்களின் மொத்த வருமானத்தில் அதன் பங்கு குறைவாகவே இருந்து வந்துள்ளது. தாங்கள் பெறும் வருமானத்திற்கு உட்பட்டே தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் வாங்க முடிகிறது.

ஆனால், விவசாயிகளின் நிலை இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களை எடுத்துப்பார்த்தால், விவசாயமும் விவசாயமற்ற துறைகளும் தங்கள் பொருட்களை எந்த விகிதத்தில் வாங்கி விற்கின்றன என்பதைக் குறிக்கும் “பொருள் மாற்று விகிதம்” (Terms of Trade), தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது என்பது தெளிவாகத் தெரியும். இந்த போக்கை நாம் ஒரு வரைபடமாகக் காட்ட முயன்றால், அது ஒரு கத்தரிக்கோல் போன்று காட்சியளிக்கும். இதனைக் “கத்தரிகோல் நெருக்கடி” (Scissors Crisis) என்பர்.

விவசாயிகள் மற்ற துறைகளின் பொருட்கள், சேவைகளையும் பெறுவதற்கு அவர்களிடம் போதிய அளவிற்குப் பணம் வேண்டும். அப்போதுதான் அவற்றிற்கான தேவையும், கிராக்கியும் அதிகரிக்கும். விவசாயிகளின் வருமானம் வேகமாக வளரவில்லை என்றால், ஒரு குறுகிய காலத்திற்கு மற்ற துறைகள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை அதிகரித்தாலும், பின் கிராக்கியின்மை காரணத்தால் அவற்றின் விலையும் சரியத் தொடங்கிவிடும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அத்துறைகளின் பொருட்களுக்கு மற்ற நாடுகளில் கிராக்கி இல்லையென்றால், அவற்றின் ஏற்றுமதியும் சரிந்து, உள்நாட்டு உற்பத்தியே பெரிதும் பாதிக்கப்படும். விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்கினால் மட்டுமே இந்த நெருக்கடி நிலையை நோக்கிப் பொருளாதாரம் செல்வதைத் தடுக்க முடியும்.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019