மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

வாக்கு எண்ணிக்கை: அதிகாரிகளுக்குப் பயிற்சி!

வாக்கு எண்ணிக்கை: அதிகாரிகளுக்குப் பயிற்சி!

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு இன்று பயிற்சி அளிக்கப்படுகிறது.

7 கட்டங்களாக நடைபெற்று வரும் 17ஆவது மக்களவைத் தேர்தல் மே 19ஆம் தேதி நிறைவடைகிறது. மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு இன்று (மே 15) சென்னை பெருநகர வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்று வருகிறது. கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி தலைமையில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில்தான் முதன்முறையாக விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதிக்கும் 5 வாக்குச்சாவடிகளில் விவிபாட் இயந்திரங்களிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படவுள்ளது.

இதனால் வாக்கு எண்ணிக்கையில் எந்த தவறுகளும், எந்த குளறுபடியும் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த இந்த பயிற்சி வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுவரையில் பல்வேறு கட்ட பயிற்சி வகுப்புகள் தொடர்ச்சியாக நடந்துவரும் நிலையில், இன்றைய பயிற்சி வகுப்பில் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. 32 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் அலுவலர்களும், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடக் கூடிய அதிகாரிகளும் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளனர். முறையாக வாக்குகளை எண்ணுவது குறித்த ஆலோசனைகளும் இந்த பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்டு வருகிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய பயிற்சி வகுப்பு மாலை வரை நடைபெறவுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019