மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

சர்க்கரை ஏற்றுமதி அதிகரிப்பு!

சர்க்கரை ஏற்றுமதி அதிகரிப்பு!

நடப்பு சந்தைப் பருவத்தில் இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி அளவு 21.29 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

2017-18 சர்க்கரைப் பருவத்தில் மொத்தம் 5 லட்சம் டன் அளவிலான சர்க்கரை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலத்தில் மொத்தம் 21.29 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அனைத்திந்திய சர்க்கரை வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் ஏப்ரல் 6 வரையிலான இக்காலத்தில் மட்டும் 9.76 லட்சம் டன் அளவிலான கச்சா சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த ஆண்டில் மொத்தம் 30 லட்சம் டன் அளவிலான சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் இந்தியாவின் வசம் உள்ளன. அதில் 28.53 லட்சம் டன் சர்க்கரையை ஆலைகள் அனுப்பிவிட்டன. வங்கதேசம், இலங்கை, சோமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி வாய்ப்புகளாக உள்ளன. சென்ற ஆண்டில் குறைந்த விலை காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டது. அதனால் சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மை குறைந்திருந்தது.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019