மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

நிறைவடைந்தது துருவ்வின் ஆதித்யா வர்மா

நிறைவடைந்தது துருவ்வின் ஆதித்யா வர்மா

துருவ் விக்ரம் நடித்து வரும் ஆதித்யா வர்மா படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு.

அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக ஆதித்யா வர்மா படம் உருவாகி வருகிறது. துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் ஆதித்யா வர்மாவை அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்த கிரி சையா இயக்கியுள்ளார். இ4 என்டர்டெய்ன்மென்ட் சார்பில் முகேஷ் மேத்தா தயாரித்துள்ளார். கதாநாயகியாக பனித்தா சந்து அறிமுகமாகவுள்ள இப்படத்தில் பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே ஒரு முறை முழுமையாக படமாக்கப்பட்டு, மீண்டும் ஆரம்பத்திலிருந்து புதிய குழுவுடன் தொடங்கியிருப்பதால், படத்தின் ஒவ்வொரு நிலையையும் விக்ரம் அருகிலிருந்தே கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆதித்யா வர்மாவின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. கபிர் சிங் படம் வரும் ஜூன் மாதம் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. அர்ஜுன் ரெட்டியை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இந்தி ரீமேக்கையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்யா வர்மாவும் ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019