மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 மே 2019

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு!

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு!

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டு காலத்துக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படைத்தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்தியா மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் பியூஷ் கோயல் இன்று (மே 14) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ.) அமைப்பானது வலுவான இந்திய எதிர்ப்பை காட்டி வந்தது. இந்திய தேசியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டே விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் வீழ்த்தப்பட்டிருந்தாலும், அவர்கள் இன்னும் தனி ஈழம் என்னும் கொள்கையைக் கைவிடவில்லை. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு திரட்டும் முயற்சிகள் இன்னும் நடந்துகொண்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் அந்த இயக்கத்துக்கு பெருமளவில் ஆதரவு உள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்படலாம். எனவே அவர்களுக்கான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. யுஏபிஏ ((UAPA)) எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

செவ்வாய் 14 மே 2019