மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

டிஜிட்டல் திண்ணை: விலகிய எம்.எல்.ஏ.-தினகரன் ரியாக்‌ஷன்!

டிஜிட்டல் திண்ணை: விலகிய எம்.எல்.ஏ.-தினகரன் ரியாக்‌ஷன்!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப்பில் தம்ஸ் அப் சிம்பல் வந்து விழுந்தது. கூடவே மெசேஜும்.

“ தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்த ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரில் பிரபு மட்டும் எடப்பாடி கட்டுப்பாட்டுக்கு போய்விட்டார் என்று டிஜிட்டல் திண்ணையில் இரண்டு நாட்களாக நாம் வெளியிட்ட செய்தி இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரபு தவிர இரு எம்.எல்.ஏ.கள் மட்டும் உச்ச நீதிமன்றம் சென்று சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.

அமைச்சர் சி.வி. சண்முகம் மூலமாக கள்ளக்குறிச்சி பிரபு அந்தப் பக்கம் போய்விட்ட தகவலை மற்ற இரு எம்.எல்.ஏ.க்கள் தினகரனிடம் நேற்று தெரியப்படுத்தி, ‘அவருக்கு பணத்தைத் தாண்டிய ஏதோ ஒரு பிரஷர் கொடுத்திருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளனர். இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த தினகரன் இதுபற்றி வெற்றிவேலிடம் ஆலோசித்துள்ளார். அப்போது வெற்றிவேல், ‘நான் வேணா சென்னை போயி பிரபுவை நேர்ல பாக்கட்டுமா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு தினகரன், ‘நீங்க போன் போட்டீங்க. தங்கம் போன் போட்டாரு, நானே போன் போட்டேன். அந்த பையன் எடுக்க மாட்டேங்குறாப்ல. இனிமே அவர் கிட்ட பேச என்ன இருக்கு. நாம அடுத்து ஆக வேண்டிய வேலைய பார்ப்போம்’ என்று கூறிவிட்டார்.

அதன் பிறகுதான் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுக்கப்பட்டிருந்தால் தன் மீதான நம்பிக்கையை நிரூபிக்காமல் மற்ற எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஸ்டாலின் பேசி வரும் விஷயம் பற்றி வழக்கறிஞர்களிடம் லீகல் ஒப்பீனியன் கேட்டிருக்கிறார் தினகரன். அப்படியென்றால் இதுபற்றி உடனே நாம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டால் என்ன என்றும் தனது வழக்கறிஞர்களோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

அதன்படியே அவசர அவசரமாக நேற்று பகலில் அபிடவிட் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அப்போதும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய இருவருக்கும் போன் செய்த தினகரன், ‘என்ன உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாமா. உங்களுக்கு சம்மதமா?’ என்று கேட்டிருக்கிறார். அவர்கள் முழு சம்மதம் தெரிவித்தபிறகு உடனடியாக அவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.

அப்போது கூட உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக மூன்று பெட்டிஷன்கள் தயார் செய்யப்பட்டன. அதாவது பிரபு பெயரிலும் ஒரு பெட்டிஷன் ரெடி செய்யப்பட்டது. காரணம், பிரபுவுக்கு வேண்டிய தினகரனின் உறவினர் ஒருவர் தான் ஒருமுறை பிரபுவிடம் பேசிப் பார்ப்பதாகச் சொல்லிச் சென்றார். ஆனால் அவரிடமும் பிரபு பேசமறுத்துவிட்டதை அடுத்துதான் இரு எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இரு எம்.எல்.ஏ.க்களுக்காகவும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். இந்த நிலையில் இரு எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை கோரி திமுகவும் மனு தாக்கல் செய்திருப்பதாக இன்று பகலில் ஊடகங்களில் செய்திகள் பரவின. முக்கிய தொலைக்காட்சிகளில் இதுபோன்ற செய்திகள் ஓடியதைப் பார்த்துவிட்டு ஸ்டாலின் தரப்பில் இருந்து சில தொலைக்காட்சி ஆசிரியர்களுக்கு போன் போட்டு அப்படியெல்லாம் எந்த மனுவும் திமுக தாக்கல் செய்யவில்லை. இது முழுக்க முழுக்க அந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனு. இதில் திமுகவுக்கு சம்பந்தம் இல்லை என்று தெரிவித்த பிறகே அந்த செய்தியை நீக்கியிருக்கிறார்கள்.

திமுக நேரடியாக மனு தாக்கல் செய்யவில்லை என்றாலும் இவ்வளவு சீக்கிரம் கபில் சிபலை ஃபிக்ஸ் செய்துகொடுத்தது உள்ளிட்ட விவகாரங்களில் திமுக சீனியர் வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பு இருந்தது உண்மைதான் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019