மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

தமிழகம்: 6 நீட் தேர்வு மையங்கள் மாற்றம்!

தமிழகம்: 6 நீட் தேர்வு மையங்கள் மாற்றம்!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மையங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட் நாளை மறுநாள் (மே 5) நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள நீட் தேர்வு மையங்கள் சிலவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வு மையங்களிலும், மையத்தின் முகவரிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் தங்களது புதிய நுழைவுச் சீட்டை (e-admit card) (www.ntaneet.nic.in) என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதனை தேர்வு நாளன்று தேர்வு மையத்தில் காண்பித்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நீட் தேர்வு பிரிவின் மூத்த இயக்குனர் கூறுகையில், “நீட் எழுதும் மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் புதிய தேர்வு மையத்தினை தெரிந்துகொண்டால், தேர்வு நாளன்று எந்தவித சிரமமும் இல்லாமல் புதிய தேர்வு மையத்திற்குச் சென்று தேர்வு எழுத முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலியில் நடைபெறும் நீட் தேர்வு மையங்கள் 6 மட்டும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

புதிய நீட் தேர்வு மைய விவரங்கள்

மைய எண்: 410604, ரோல் நம்பர்: 410602881-410603660

மதுரை விரகனூர், வேலம்மாள் நகரில் உள்ள மதுரை-ராமேஸ்வரம் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற இருந்த தேர்வு, தற்போது வேலம்மாள் நகரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

மைய எண்: 410612, ரோல் நம்பர்: 410608041-410608640)

திருநெல்வேலி தியாகராஜா நகரில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருந்த தேர்வானது, தற்போது மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. மதுரை அழகர் கோவில் அ.வளையப்பட்டி உள்ள பாண்டுகுடி ஸ்ரீ லட்சுமி நாராயண வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யபட்டிருக்கிறது.

மைய எண்: 410618, ரோல் நம்பர்: 410611401-410611880

மதுரை நரிமேடு, பி.டி.ராஜன் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா (No 1) பள்ளியில் நடக்க இருந்த தேர்வு தற்போது மதுரை விரகனூர், வேலம்மாள் நகரில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

மைய எண்: 410619, ரோல் நம்பர்: 410611881-410612360

மதுரை பி&டி நகர் எக்ஸ்டென்சனில் உள்ள புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருந்த தேர்வானது, மதுரை எய்ம்ஸ் சாலை, தனபாண்டியன் நகரில் உள்ள தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது.

மைய எண்:410621, ரோல் நம்பர்: 410612841-410613320

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா (No.2) பள்ளியில் நடக்க இருந்த தேர்வு தற்போது மதுரை திருநகர் 3ஆவது நிறுத்தத்தில் உள்ள சி.எஸ்.இராமச்சாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

மைய எண்: 410629, ரோல் நம்பர்: 410616201-410616560

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019