மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

சுங்கச்சாவடியில் நகை கொள்ளை: 3 பேர் கைது!

சுங்கச்சாவடியில் நகை கொள்ளை: 3 பேர் கைது!

கடந்த மாதம் செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

சென்னை அண்ணாசாலையிலுள்ள அமெதீஸ்ட் நகைக்கடை ஊழியர்கள், கடந்த மாதம் மதுரையில் நடந்த கண்காட்சியொன்றில் கலந்துகொண்டனர். கடந்த 28ஆம் தேதியன்று நகைக்கடை மேலாளர் தயாநிதி உள்ளிட்ட ஊழியர்கள் சென்னை திரும்பியபோது, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே சிலர் காரில் வந்து அவர்களை வழிமறித்தனர். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் என்று கூறி, அவர்களது காரில் இருந்த 130 சவரன் நகைகள், 9 கோடி ரூபாய் பணம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

தங்களைப் பின்தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வருமாறு கூறிச் சென்றனர். சென்னை கிண்டியிலுள்ள அலுவலகத்துக்குச் சென்றபோது, மோசடிப் பேர்வழிகளின் நடிப்பில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர் நகைக்கடை ஊழியர்கள். இது தொடர்பாக செங்கல்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இந்த கொள்ளை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

தயாநிதி கொடுத்த தகவலின் பேரில் அப்பாஸ் என்ற நபரின் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. நகைக் கடத்தல் தொடர்பாக அவரைப் பற்றி தகவல் தெரிவிக்குமாறு அறிவித்தது காவல் துறை. தற்போது அப்பாஸும் அவரது கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019