மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

இந்தியாவுக்கு வரும் ரியல்மீ எக்ஸ்!

இந்தியாவுக்கு வரும் ரியல்மீ எக்ஸ்!

ரியல்மீ நிறுவனம் தனது ஃப்ளாக்‌ஷிப் மொபைலான ரியல்மீ 3 ப்ரோ ஸ்மார்ட்போனை மூன்று நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதுமட்டுமல்லாமல், வேறு சில பெரிய திட்டங்களையும் இந்தியாவுக்காக ரியல்மீ உருவாக்கியுள்ளது. ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போன் இம்மாதத்தில் சீனாவில் வெளியாகவுள்ளது. இந்த மொபைலின் புரொமொ வீடியோ அண்மையில் வெளியானது. இந்த மொபைலில் பாப்-அப் செல்ஃபி கேமரா இருப்பது புரொமோ வீடியோ வாயிலாக தெரியவந்துள்ளது.

மே 15ஆம் தேதியன்று சீனாவில் ரியல்மீ எக்ஸ் வெளியாகும் என அந்நாட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கு பின் இந்தியாவில் ரியல்மீ எக்ஸ் வெளியாகும் என அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரியல்மீ இந்தியா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மாதவ் சேத் வெளியிட்டுள்ளார். எனினும், இந்தியாவில் சரியாக எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி அவர் எந்தத் தகவலும் வழங்கவில்லை. எனினும், சீனாவில் வெளியான உடனே இந்தியாவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019