மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

திரெட்டுன்னாலே பிரச்சினை தான் சார் :அப்டேட் குமாரு

திரெட்டுன்னாலே பிரச்சினை தான் சார் :அப்டேட் குமாரு

ட்விட்டர்ல ஆளாளுக்கு ஒரு திரெட்டை புடிச்சிட்டு பேசிட்டு இருப்பாங்க. ஆனால், எல்லாருமா சேர்ந்து ஒரே திரெட்டை யூஸ் பண்ணதை இன்னைக்குத்தான் பார்க்க முடிஞ்சது. அது என்னன்னா, தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே அப்படின்னு எல்லாருமா சேர்ந்து ஒரே ஹேஷ்டேக்ல தொடர்ந்து போஸ் போட்டுக்கிட்டு இருந்தாங்க. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, அந்த திரெட்ல வந்தது எல்லாமே டேட்டா சம்மந்தப்பட்ட விஷயங்கள். தமிழ்நாட்டோட ஒவ்வொரு துறைலயும் எத்தனை வட மாநிலத்தவர்கள் இருக்காங்க? தமிழர்களுக்கு மத்த மாநிலங்களில் என்ன பங்கு இருக்கு? இப்படி பல டேட்டாவை தேடி எடுத்து வரிசையா போட்டதுல, ‘இதெல்லாம் எப்படி பாஸ் பாஸிபில்?’னு கேட்டவங்க கூட, ஓ இவ்ளோ பண்றானுவளான்னு டென்சனாகி அதுல சேர்ந்தது தான். டிவிட்டர்ல மட்டும் இல்லை; பொதுவாவே தமிழ்நாட்ல இருந்து வர்ற திரெட்டுன்னாலே அது எப்பவும் வட இந்தியாவுக்கு கொஞ்சம் பிரச்சினை குடுக்குறதா தான் இருக்கும். போய் படிச்சு பார்த்து உய்யவும். நான் போய், அந்த பானி பூரி ரெஸபியை கத்துக்கிட்டு வந்து பேசிக்கிறேன் இருங்கய்யா.

கோழியின் கிறுக்கல்!!

உலகிலேயே நாம எளிதில் கோவப்படுவதும் அதை எளிதாக எடுத்துக் கொள்வதும் அம்மாவின் மீது தான்!!!

Hasan Kalifa

ராஜஸ்தானில் ஏதோ ஒரு ரயில்வே நிலையத்தில் தமிழர்களை வேலைக்கு அமர்த்தினால்,அவர்களால் வேலை செய்ய முடியுமா என்பதைவிட உயிரோடு இருக்க முடியுமா என்பதே

பெரிய கேள்விக்குறி.

SubaVeerapandian

தமிழ்நாட்டில் #யாகம் வளர்த்தால், ஒடிசாவில் புயல் அடிக்கிறது. மிகவும் வலிமையான யாகம் போலிருக்கிறது

A.P.Perumal

கல்லூரி படிப்பை

முடிக்கும் முன்

பத்து தடவையாது

அடகுக்கு சென்று

திரும்பியிருக்கும்

அம்மாவின் தோடு

படித்து வேலைக்கு

அமர்ந்தவுடன் நல்ல

தோடு வாங்கி தரனும்

வைராக்கியம் கொள்வதுண்டு.

படித்தேன் பணிக்குச்சேர்ந்தேன்.

கணிச ஊதியம்

சாமியாகிவிட்ட அம்மாவின்

படத்துக்கு முன் நான்

வாங்கிய தோடு.

கோழியின் கிறுக்கல்!!

கரும்புச் சாற்றிற்கு ஒழுங்காக கழுவப்படாத அந்த கண்ணாடி கோப்பை புது சுவையை அளித்து விடுகிறது!!!

ஜோக்கர்...

"கெஞ்சினாள் மிஞ்சுவாள், மிஞ்சினால் கெஞ்சுவாள்" ~இது காதலிசம்

சரின்னு அமைதியா போனா ஓவரா சவுண்ட் குடுக்குறே?? சவுண்ட் குடுத்தா, உடனே பம்முறே?!! ~ இது கணவனதிகாரம்

ʍʀ.ǟռɢʀʏ - Refurbished

அடகு வைத்து விட்டால் மீட்க முடியாத ஒன்று நமது சந்தோஷம் மட்டுமே...

அதை யாருக்காகவும் யாரிடமும் அடகு வைத்து விடாதீர்கள்

ராச்

இரயிலில் பதினாறு வயது பையன் பலாசுளை விற்றுக்கொண்டிருக்கிறான்

அந்த வறுமை கடந்தகாலத்தை நினைவூட்டி கையழுத்தி அமர்த்துகிறது ஆசைகளை.

𝓹𝓻𝓲𝔂𝓪 𝓳𝓸𝓱𝓷𝓼𝓸𝓷

எல்லாரும் அழகழகா காதல் கவிதை எழுதறத பார்த்தா நாமும் எழுதனும் ன்னு ஆசையாத்தான் இருக்கு .

ஆனா, அந்த எருமயை நெனச்சா ஒன்னுமே வரமாட்டேங்குது

செந்திலின்_கிறுக்கல்கள்

வெளியே கேட்க மறந்த குருவியின் சத்ததை வீட்டிற்குள்ளேயாவது கேட்க வைத்ததில் காலிங் பெல்லும் பக்‌ஷி ராஜன் தான்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தமிழ்நாட்டில் தொடர்வண்டித்துறையில் அதிகாரிகள் முதல் ரயில்வே கேட் மூடித் திறப்பவர்கள் வரை பெரும்பாலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 90% வேலையில்

சேர்த்து உள்ளார்கள். இது தமிழின ஒதுக்கல் இல்லையா?

கடைநிலை ஊழியன்

தீபாவளிக்கு வெடிக்கவா அணுகுண்டு.. மோடி பேச்சில் விதிமீறல் இல்லை.. தேர்தல் ஆணையம் விளக்கம் - செய்தி

இது தேர்தல் ஆணையமா இல்ல சவுக்கித்தார் மோடி ஆணையமா னு தெரியலயேமா!!

Mr.பழுவேட்டரையர்

அதிகார வர்க்கம் என்பது இப்படிப்பட்ட அரச வேலை வாய்ப்புகள் ஊடாகவே கட்டமைக்கபடுகிறது. உனது நாட்டை ஆளும் அதிகார வர்க்கத்திற்கு உன் மொழி புரியவில்லை என்றால்,

அங்கு 'அதிகாரம்' உனக்காக பயன்படவில்லை, உன்னை அடக்கி ஆளவே பயன்படுகிறது என்று பொருள்.

காளையன்

"நாலு பேருக்கு உதவும்"னா எதுவுமே தப்பில்ல.. அது நம்மளுக்கே உலை வைக்கும்னா ரொம்ப "தப்பு"!!

மனோ

அனுப்பின நூறு மெசஜ் விட டெலீட் பண்ண ஒத்த மெசஜ்க்கு தான் மவுசு அதிகம்

-லாக் ஆஃப்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019