மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

இன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்!

இன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்!

மே 3ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக பத்திரிகை சுதந்திர தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் என்று வர்ணிக்கப்படுகிறது. அந்த நான்காவது தூண்களில் ஒன்றான பத்திரிகை ஊடகங்களின் சுதந்திர தினம் இன்று. 1993ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையால் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பத்திரிகை சுதந்திரம் குறித்த அழுத்தமான குரல்கள் ஐநாவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியதையடுத்து இந்தத் தினம் உருவாக்கப்பட்டது. பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டிக்காப்பது, பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலைகளை தடுப்பது போன்ற நோக்கங்களுடன் இத்தினம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நாளில் பத்திரிகை சுதந்திரத்திற்காக துணிச்சலுடன் செயல்பட்ட ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. கிலெர்மோ கானா என்ற கொலம்பிய நாட்டு பத்திரிகையாளரின் நினைவாக யுனெஸ்கோ இந்த விருதை வழங்கி வருகிறது. எல் எஸ்பேக்ட்டடர் என்ற பத்திரிகையில் பணியாற்றிய இவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதற்காக 1986ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அவரது அலுவலக வாயிலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய நினைவாகவே மே 3ஆம் தேதி இந்த விருது வழங்கப்படுகிறது.

பத்திரிகை சுதந்திரத்துக்கான தினம் தனியாக உருவாக்கப்பட்ட போதிலும், பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்கள் சுதந்திரம் இன்னும் பல நாடுகளில் பல்வேறு அச்சுறுத்தல்களுடன்தான் உள்ளது. 2018ஆம் ஆண்டில் 80க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் உலகம் முழுவதும் கொல்லப்பட்டுள்ளனர். 2006ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 155 பேர் கொல்லப்பட்டிருந்தனர். பத்திரிகையாளர்களை சிறையிலடைப்பதும் அதிகமாகவே உள்ளது. 2018ஆம் ஆண்டில் 240க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் உலகம் முழுவதும் சிறையிலடைக்கப்பட்டனர். அதில் துருக்கியில் மட்டும் 68 பேரும், சீனாவில் 47 பேரும், எகிப்தில் 25 பேரும் சிறையிலடைக்கப்பட்டனர். துருக்கி இதில் கடந்த 3 ஆண்டுகளாகவே முதலிடத்தில் உள்ளது.

அதேபோல பத்திரிகை சுதந்திர நிலை குறித்த 2019ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியா 140ஆவது இடத்தைப் பிடித்து பின்தங்கியுள்ளது. முந்தைய ஆண்டில் 138ஆவது இடத்தில் இருந்தது. முதலிடத்தில் நார்வே, இரண்டாவது இடத்தில் பின்லாந்து, மூன்றாவது இடத்தில் சுவீடனும் உள்ளன.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019