மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

சுத்த வேஸ்ட் ப்ரோ! - பா.நரேஷ்

சுத்த வேஸ்ட் ப்ரோ! - பா.நரேஷ்

பொறியியல் பட்டங்கள் பற்றி மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இன்று கல்லூரிப் படிப்பு என்பது பணிகளுக்கான நுழைவாயில் என்பதே பெரும்பான்மையானவர்கள் கல்லூரிகளுக்குள் நுழையக் காரணமாகியிருக்கிறது. கல்லூரிக்குப் பிள்ளைகளை அனுப்புவதே சம்பாதிப்பதற்காகத்தான் என்று பெற்றோர் மனதில் ஓர் ஆழமான கற்பிதம் ஆணியடிக்கப்பட்டிருக்கிறது.

டிகிரி என்பதைத் தாண்டி கல்லூரிப் படிப்பிற்கென்று வேறு ஏதும் பயன் இருக்கிறதா என்பதை அறிய, எஞ்சினியரிங் படித்துவிட்டுத் தற்போது துறை சார்ந்த வேலைகளில் பணிபுரிந்துகொண்டிருப்பவர்களிடம் பேசினேன். கணிணி மற்றும் மென்பொருள் சார்ந்த துறைகளுக்கு எந்தப் பாடத்தைப் படித்தவர்களும் பணி செய்யலாம். ஆனால், 'Core subjects' என்று சொல்லப்படும் சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் படித்து, துறை சார்ந்த வேலைகளிலேயே இருப்பவர்களுக்கு கல்லூரிப் படிப்பில் ஏதேனும் பயன் இருக்கிறதா என்று அறிய விரும்பினேன்.

சிவில் எஞ்சினியரிங்:

என் பெயர் மாதேஷ். பூந்தமல்லியில இருக்கும் பனிமலர் எஞ்சினியரிங் காலேஜ்ல பி.இ.சிவில் எஞ்சினியரிங் படிச்சேன். இப்போ .... கம்பெனில Site Engineer-ஆ வேலை செய்யறேன் (நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்). நான் மெரிட்ல ஸீட் கிடைச்சு படிச்சவன்தான். ஃபர்ஸ்ட் கிளாஸ்ல எந்த அரியரும் இல்லாமதான் பாஸ் பண்ணேன். ஆனா, வேலைக்கு வந்ததுக்கப்புறம் நாலு வருஷத்த வேஸ்ட் பண்ணிட்டோமேனு தோணுது. இந்த மீம்ஸ்ல எல்லாம் பாப்பீங்கள்ல? கொத்தனாரையும் சிவில் எஞ்சினியரையும் வெச்சு காமெடி பண்ணியிருப்பாங்களே.. அதெல்லாம் உண்மைதான் ப்ரோ. ஒரு கொத்தனாருக்குத் தெரிஞ்ச விஷயங்கள்கூட எங்களுக்குத் தெரியாது.

அவங்களுக்குத் தெரியாத ஒண்ணு எங்களுக்கு தெரிஞ்சிருக்குன்னா, அது Technical names மட்டும்தான். வெறும் பேர் மட்டும் வெச்சிட்டு இங்க ஒண்ணும் பண்ண முடியாது ப்ரோ. Strength of Materialsனு ஒரு பேப்பர். அதுதான் பேசிக்னு சொல்லி அதி தீவிரமா படிச்சேன். அதுல தெரிஞ்சுக்கிட்ட பெயர்கள்தான் அதெல்லாம். உதாரணமா ஒரு சாதாரண விஷயம் சொல்லுறேன். Brick Dimensionனு நாங்க ஒண்ணு படிச்சிருப்போம். ஆனா தொழில்நுட்ப வளர்ச்சியோட உச்சத்துல Brick (செங்கல் மற்றும் அதுசார்ந்த கட்டுமான பொருட்கள்)- இல்ல. Construction materials-லாம் எவ்வளாவோ மாறிடிச்சு. அதை பத்தின குறைந்தபட்ச அறிமுகம்கூட எங்களுக்கு இல்ல.

Survey-னு ஒரு பேப்பர் இருக்கு. அதுல கல்லூரிகள்ல கத்துக்கொடுக்குறக்காக வெச்சிருக்க Equipments எல்லாம் அரதப் பழைய தொழில்நுட்பம். இன்னைக்கு ரோடு போடுறதுக்கும் நிலம் அளவைக்கு கொண்டு வர்றாங்கள்ல, அதைத்தான் அங்க சொல்லித்தருவாங்க. ஆனா ஃபீல்டுல Measuring Instruments (அளவை மானிகள்) எல்லாம் வேற லெவல்ல இருக்கு. அரதப் பழசான சாமான்களை வெச்சு பேசிக்ஸ் தெரிஞ்சுக்கலாம். ஆனா அதுக்கு 4 வருஷம்லாம் ரொம்ப அதிகம் ப்ரோ. வெறும் 6 மாசத்துல கத்துக்குற விஷயம் அது.

காலேஜ் ஃபீஸ் வருஷத்துக்கு மினிமம் ரெண்டு லட்சம். பயணம், சாப்பாடு, புக்ஸ், ப்ராஜக்ட்னு எல்லாத்துக்கும் சேர்த்து சொல்லுறேன். இப்போ எனக்கு காலேஜ் ஃபீஸ்க்கு வாங்குன கடன கட்றதுக்கே வழியில்லாம இருக்கு. வாங்குற சம்பளத்தை வெச்சு நான் எதிர்காலத்தை எப்படி தீர்மானிக்கிறது. காலேஜ் எல்லாம் பணம் புடுங்குறக்காக கட்டப்படுற தொழிற்சாலைகள். எனக்கு கீழ வேலை செய்யுற கொத்தனாருக்கு என் அளவுக்கு சம்பளம். அவருக்கிட்ட அஸிஸ்டண்டா இருந்தாக்கூட நான் நிறைய கத்துக்கிட்டிருப்பேன்னு நிறைய தடவ நினைச்சிருக்கேன்.

ஆட்டோமொபைல் எஞ்சினியரிங்:

என் பேரு விக்னேஷ். பொள்ளாச்சி மகாலிங்கம் காலேஜ்ல ஆட்டோமொபைல் படிச்சேன். ஏ.பி.டி மாருதில வேலை செஞ்சேன். சிம்பிளா சொல்றேன் ப்ரோ, ஒரு Piston எப்படி வேலை செய்யுதுனு மட்டும்தான் அந்த 4 வருஷத்துல கத்துக்கிட்டேன். வேறெதுவும் பெருசா யூஸ் ஆகல. அதுவும் பிஸ்டன் தொழில்நுட்பம் இப்போ எலக்ட்ரிசிட்டியை சார்ந்து வந்திருச்சு. எங்களுக்கோ ஃபுயல் பிஸ்டன் பத்திதான் முழுசா தெரியும். Electricity driven piston பத்தின அறிமுகம் மட்டும்தான் தெரியும். ரெண்டுத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லைனாலும், எது தொழில்நுட்ப தேவைன்னு தெரிஞ்சிக்கணுமா இல்லையா?

மெஷின் டிசைனிங், 3-டி ட்ராயிங் எல்லாம் நான் வெளிய கிளாஸ்ல கத்துக்கிட்டதுதான் யூஸ் ஆகுது. காலேஜ்ல சொல்லிக் குடுத்ததெல்லாம் அந்த ப்ராக்டிக்கல் லேப்ல மார்க் எடுத்ததோட முடிஞ்சது. வேற எதுக்கும் பயன்படல. ஆட்டோமேஷன் என்கிற துறை இன்னைக்கு எல்லாத்தோட வேலை வாய்ப்புகள்ளையும் கை வெச்சிருக்கு. அதுக்குக்கூட ஆட்டொமொபைல் எஞ்சினியரிங் அறிவு தேவை.

இப்போ நான் உங்ககிட்ட சொல்றதெல்லாம் யூட்யூப் விடியோஸ்ல பாத்து கத்துக்கிட்டதுதான். நல்ல நண்பர்களும் நல்ல ஆசிரியர்களும் அமைஞ்சா இந்த கல்லூரி காலத்துல ஏதாவது பயன் இருக்கும். அதுவும் எங்களுக்கு 3rd yearல வந்த ப்ரொஃபசர்தான் என் மண்டையில கொஞ்சூண்டு அறிவு ஏறுனதுக்குக் காரணம். மத்தப்படி சிலபஸ், காலேஜ் டிகிரி பத்தி கேட்டீங்கன்னா… டோட்டலி வேஸ்ட்!

(உரையாடல்கள் தொடரும்..)

படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் உண்டா?

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019