மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

இந்தியர்களுக்குக் கிடைத்த வெற்றி - அருண் ஜேட்லி

இந்தியர்களுக்குக் கிடைத்த வெற்றி - அருண் ஜேட்லி

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதி என ஐநா கமிட்டி அறிவித்திருப்பது, அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

பிப்ரவரி மாதம் நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலில் 40 இந்தியத் துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரை சர்வதேச தீவிரவாதி என ஐநா சபை மே 1ஆம் தேதி அறிவித்தது. இது இந்தியர் அனைவருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், இந்த வெற்றியினைக் கொண்டாட எதிர்க்கட்சியினர் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக அலுவலகத்தில் நேற்று (மே 2) அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “10 ஆண்டுக்கால முயற்சிக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சியினர் இந்த வெற்றி அற்பத்தனமானது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று கூறுவர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தாலும், ஐநா சபை, அவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்துள்ளது” என்றார்.

வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தேசப் பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளில் ஒத்த குரல்கள் எழும் வழக்கம் இந்த நாட்டிலிருந்து வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இது மரணித்துவிட்டது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரை ஐநா, ‘சர்வதேச தீவிரவாதி’ என அறிவித்திருப்பது இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்தியர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. ஆனால், எதிர்க்கட்சியில் இருக்கும் சில நண்பர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடவில்லை. இது அவர்களுக்கு ஒருவேளை அரசியல் ஆதாயம் கிடைக்காமல் இருக்கலாம்” என்றும் அவர் கூறினார்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019