மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

செவ்வாய்க்குப் போவோமா?!

செவ்வாய்க்குப் போவோமா?!

டிஜிட்டல் டைரி! - சைபர் சிம்மன்

கூகுள் ஸ்டிரீட் வியூ சேவையை நீங்கள் அறிந்திருக்கலாம். கூகுள் வரைபடத்தின் மீது குறிப்பிட்ட இடங்களின் சுற்றிச் சுழலும் வகையிலான காட்சிகளைப் பார்க்க வழி செய்வதுதான் இந்தச் சேவையின் சிறப்பு. அதாவது, ஸ்டிரீட் வியூ காமிராவில் எடுக்கப்பட்ட காட்சிகளை 360 டிகிரி கோணத்திலும் பார்க்கலாம். திரையில் தோன்றும் காட்சியை மவுஸ் கொண்டு மேலும் கீழும் பக்கவாட்டிலும் என எப்படி நகர்த்தினாலும் அந்தத் திசையில் விரியும் காட்சியை பார்க்கலாம். பார்க்கும் இடத்திலேயே உலாவுவது போன்ற உணர்வை இது அளிக்கும்.

இந்த வகையில் இப்போது ஸ்டிரீட் வியூ மூலமே செவ்வாய் கிரக அனுபவத்தைப் பெற கூகுள் வழி செய்திருக்கிறது. செக்கச்செவேலெனத் தோன்றும் செவ்வாய் கொஞ்சம் கரடுமுரடான பிரதேசமாக அறியப்படுகிறது. செவ்வாய்க்கு நிகரான ஒரு பகுதி பூமியிலும் இருக்கிறது. கனடா அருகே ஆர்டிக் கடல் பகுதியில் உள்ள டேவன் தீவுகள்தான் அந்தப் பகுதி. உலகில் மனித நடமாட்டமே இல்லாத பகுதி இது. இதன் வறண்ட பாறைப்பகுதி பெரும் சவாலானாது.

செவ்வாய் கிரகத்தின் தன்மையை பெற்றிருப்பதால், மார்ஸ் கழகத்தின் தலைவர் பாஸ்கல் லீ தலைமையிலான ஆய்வுக் குழு இந்த தீவில் ஆய்வு செய்துவருகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவாலான சூழலைச் சமாளிக்க தேவைப்படும் முன்னேற்பாடுகளை அறிவதற்காக இக்குழு இங்கு ஆய்வு செய்கிறது. அண்மையில், கூகுளின் ஸ்டிரீட் வியூ குழு, இந்த தீவுக்குசென்று இங்குள்ள சூழலை படம் பிடித்து அரங்கேற்றியுள்ளது.

ஆக, நீங்களும் இப்போது பூமியில் உள்ள செவ்வாய் கிரகப் பகுதியை ஆன்லைனில் பார்த்து வியக்கலாம்

சைபர் உலகின் ‘தீர்க்கதரிசி’!

சமூக ஊடக உலகில் புதிய சேவைகள் அறிமுகமாக இருப்பதை முன்கூட்டியே அறிந்துகொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், ஜேனே மன்சுன் வாங்கை (Jane Manchun Wong) டிவிட்டரில் பின்தொடர்வது நல்லது. ஏனெனில், ஹாங்காங்கைச் சேர்ந்தவரான ஜேனே வாங் புதிய சேவைகளைக் கண்டறிந்து சொல்வதை தனது பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்.

24 வயதான வாங் ஓய்வு நேரத்தில் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளின் பின்னே உள்ள நிரல்களை ஆய்வு செய்து அதன் மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய சேவைகளை முன்னதாகவே ஊகித்து அந்தத் தகவலைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொள்கிறார். இதற்காகவே பத்திரிகையாளர்கள்கூட அவரை டிவிட்டரில் பின் தொடர்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது அவரது டிவிட்டர் பக்கம்: @wongmjane

கடந்த காலங்களில், இன்ஸ்டாகிராம் புதிய டேஷ்போர்டை அறிமுகம் செய்ய இருப்பது, டிவிட்டர் உரையாடல் தொடர்பான புதிய சேவையை அறிமுகம் செய்ய இருப்பது உள்ளிட்ட விஷயங்களை இப்படித்தான் அவர் கச்சிதமாகக் கண்டறிந்து சொல்லியிருக்கிறார். புதிய சேவைகளை கண்டறிந்து சொல்வதோடு, இணைய சேவைகளில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் அவற்றையும் அறிந்து நிறுவனங்களுக்குத் தகவல் கொடுக்கிறார் (இதற்கு நிறுவனங்கள் பரிசும் அளிக்கின்றன). கம்ப்யூட்டர் அறிவியல் படிக்கும் வாங், உள்ளூர் நூலக புத்தகங்களை படித்து மென்பொருளையும் நிரல்களையும் கற்றுக்கொண்டாராம்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019