மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

திமுக புள்ளிகளிடம் போனில் பேசிய ராமதாஸ்

திமுக புள்ளிகளிடம் போனில் பேசிய ராமதாஸ்

தேர்தலின்போது வன்னிய சமூகத்தைச் சார்ந்த திமுக பிரமுகர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி பிரமுகர்களின் செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசியதாகக் கூறுகிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள்.

கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களின்போதெல்லாம் தேர்தல் செலவுகளுக்கென கட்சித் தலைமை ஒரு பைசா கூட கொடுக்காது என்று பாமக நிர்வாகிகள் பலரும் அதிருப்தி தெரிவிப்பார்கள். ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வழக்கத்துக்கு மாறாக பாமக முக்கிய பொறுப்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் கட்சி நிர்வாகிகளை நன்கு கவனித்துள்ளாராம் அன்புமணி. கடலூர், விழுப்புரம், தருமபுரி, அரக்கோணம், தொகுதிகளில் அன்புமணி பிரச்சாரத்துக்குச் சென்றபோது அங்கிருக்கும் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பாமக நிர்வாகிகளை கரன்சியால் கவனித்துள்ளதாகச் சொல்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.

அதேபோல் பாமக போட்டியிட்ட தொகுதிகளில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகளிடம் உள்ளூர் கட்சி பிரமுகர்களின் செல்போன் மூலமாகவும் தொடர்புகொண்டு பேசியுள்ளார் ராமதாஸ். மேலும், முக்கியமான பிரமுகர்கள் மூலமாக திமுக புள்ளிகளிடம் பேசி சமூகப் பாசத்தை எடுத்துச் சொல்லி மாம்பழத்தை வெற்றி பெறவைக்கச் சொல்லியுள்ளார்.

உதாரணமாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பாமக பொறுப்பாளர் ஒருவர், அதிமுக முக்கிய பிரமுகர்களின் வீடு தேடிச் சென்று, ராமதாஸுக்கு போன் போட்டு கொடுத்திருக்கிறார். ஐயா பேசுகிறாரா என்று ஆர்வத்தோடு பேசும் நிர்வாகியிடம் எதிர்முனையில் பேசும் ராமதாஸ், குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்துவிட்டு நமது வேட்பாளரை வெற்றி பெறவைக்க கடுமையாக வேலைசெய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ராமதாஸே நம்மிடம் பேசியிருக்கிறார் என்று நிர்வாகிகளும் சுணக்கம் இல்லாமல் தேர்தல் பணிகளைக் கவனிப்பார் என்பதுதான் இதற்கு நோக்கம் என்கிறார்கள்.

அதேபோல் திமுகவில் உள்ள வன்னியர் சமுதாய பிரமுகர்களிடமும் பேசியுள்ளார் ராமதாஸ். அதனால் சில தொகுதிகளில் திமுக பிரமுகர்கள் நேரடியாகவே பாமகவுக்கு வாக்கு கேட்டார்கள் என்றும், இது தொகுதியிலுள்ள திமுக பிரமுகர்களுக்கும் தெரியும் என்கிறார்கள் அக்கட்சியினர்.

தான் திமுக பிரமுகர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு பேசினால் எதிர்முனையில் உள்ளவர்கள் யாராவது உரையாடலைப் பதிவு செய்து வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்களில் வெளியிட்டுவிடுவார்கள் என்று கருதிய ராமதாஸ், சம்பந்தப்பட்ட தொகுதியில் உள்ள நம்பிக்கையான பொறுப்பாளர்கள் மூலமாகத் தொடர்புகொண்டுள்ளார்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019