மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

கிச்சன் கீர்த்தனா: உளுந்தங்கஞ்சி

கிச்சன் கீர்த்தனா: உளுந்தங்கஞ்சி

ஹார்மோன் குறைபாடுகளுக்குச் சிறந்த தீர்வு

சித்த மருத்துவத்தில் ஏராளமான கஞ்சி வகைகள் உள்ளன. மருத்துவ நூல்களில் கஞ்சி என்பது நீர்ச்சோறு என்றும், புனற்பாகம் என்றும் கூறப்பட்டுள்ளது. உடலை இயங்கவைக்கும் ஆற்றலாக இருக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று சக்திகளை நல்ல முறையில் செயல்படுத்தும் ஆற்றல் கஞ்சிக்கு உண்டு. இந்த வகைக் கஞ்சிகள் நாவுக்கு இதமாகவும் ஆரோக்கியம் தருவதாகவும் உள்ளன. உளுந்தங்கஞ்சி பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். சிலர் சாப்பிட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

என்ன தேவை?

உளுந்தம்பருப்பு - ஒரு டம்ளர் (கருப்பு உளுந்து நல்லது)

பச்சரிசி - அரை டம்ளர்

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

பூண்டு - 20 பல்

வெல்லம் அல்லது கருப்பட்டி - இனிப்புக்கு ஏற்றது போல்

தேங்காய் - அரை மூடி

எப்படிச் செய்வது?

உளுந்தம் பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து எட்டு விசில் வரும் வரை விடவும். இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியைச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக்கொள்ளவும். தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

குக்கரில் எட்டு விசில் வந்தவுடன் இறக்கி சூடாக இருக்கும்போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப்பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.

என்ன பலன்?

உளுந்தங்கஞ்சி வலி நோய்களைப் போக்கக்கூடியது. அதுமட்டுமன்றி பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நீர்க்கட்டிகள், அதனால் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக உளுந்து அமையும். இன்று, 99 சதவிகிதப் பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் இருக்கின்றன. அதைச் சரிசெய்ய உடல் உழைப்பு மற்றும் வாழ்வியல் மாற்றங்களோடு உளுந்தங்கஞ்சி போன்ற உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல மாற்றத்தைப் பெற முடியும்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019