மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

59 நிமிடத்தில் கடன்: 38,000 கோடி ஒப்புதல்!

59 நிமிடத்தில் கடன்: 38,000 கோடி ஒப்புதல்!

59 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.37,870 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் விதமாக 59 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கி வைத்தார். தொழில் கடன்கள் பெறுவதற்கு மாதக் கணக்கில் வங்கிகளுக்கு அலைய வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், 59 நிமிடத்தில் கடனை உறுதி செய்யும் இத்திட்டமானது தொழில் துறையினரிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் கடன் தொகையை அதிகரிக்கவும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கடன் தொகையை அதிகரிப்பதற்கான மதிப்பாய்வு கூட்டத்தை நிதித் துறை அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலகம் இந்த வாரத்தில் நடத்தியுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் மார்ச் 31 வரையில் ரூ.37,870 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ் ஊடகத்திடம் பேசுகையில் தெரிவித்துள்ளார். தற்போது இத்திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வரையில் வழங்கப்படும் கடன் மதிப்பை படிப்படியாக ரூ.3 முதல் ரூ.5 கோடி வரை உயர்த்தவும் நிதி அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019