மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 பிப் 2019

காணாமல் போன சிறுமியின் எலும்புக் கூடு கண்டெடுப்பு!

காணாமல் போன சிறுமியின் எலும்புக் கூடு கண்டெடுப்பு!

திருவள்ளூரில் 5 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமியின் எலும்புக்கூடு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், கடந்தாண்டு செப்டம்பர் 7ஆம் தேதி காணாமல் போனார். இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று பள்ளிக்குச் சென்ற அந்த சிறுமி, வீடு திரும்பவில்லை. இது குறித்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், கீச்சலம் கிராமத்திலுள்ள கரும்புத் தோட்டத்தில் மனித எலும்புத் துண்டுகள் கிடப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அந்த இடத்திற்குச் சென்ற போலீசார், குறிப்பிட்ட இடத்தில் பள்ளிச் சீருடை, புத்தகப்பை, தலைமுடி உள்ளிட்டவை புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். அவற்றை ஆய்வு செய்ததில், 5 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளிச் சிறுமி அங்கு எலும்புக் கூடாகக் கிடப்பதை உறுதி செய்தனர்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

திங்கள் 11 பிப் 2019