மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

டிஜிட்டல் திண்ணை: தனித்துப் போட்டி-கடைசிவரை போராடிய கமல்

டிஜிட்டல் திண்ணை: தனித்துப் போட்டி-கடைசிவரை போராடிய கமல்

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. " கடந்த டிசம்பர் 22- ம் தேதி டிஜிட்டல் திண்ணையில் சொல்லியதை ஒரு பார்வை பார்த்துவிட்டு விஷயத்துக்கு வருவோம். "அடுத்த கட்டம் என்ன என்பதை தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டார் கமல். மும்பையை சேர்ந்த ஒரு தனியார் சர்வே ஏஜென்சி மூலமாக சர்வே ஒன்றை எடுத்திருக்கிறார். அதில் தனித்து போட்டியிட்டால் வாக்கு சதவீதம் மிக குறைவாகவே இருக்கும் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகே கூட்டணி பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

இன்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அறிவித்தும் விட்டார் கமல். அவரது மனதில் இருந்தது காங்கிரஸ்தான். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி வந்துவிடும்... காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வந்தார் கமல்.

ஆனால், காங்கிரஸ்- திமுக கூட்டணி என்பது உறுதியாகி விட்டது. இதை கமல் எதிர்பார்க்கவில்லை. ஆனால், காங்கிரஸை தவிர்த்து வேறு கூட்டணி என்பது நாடாளுமன்ற தேர்தலில் சரியாக இருக்காது என நினைக்கிறாராம் கமல்.

அதனால், காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு நாம் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கலாம் என யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம். அதாவது காங்கிரஸுக்கு ஒதுக்கும் சீட்டில் கமல் பங்கிட்டுக்கொள்வார். திமுகவுக்கும் கமலுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் பிரச்சாரத்துக்கு மட்டும் எல்லா தொகுதிக்கும் போகலாம் என்பது கமல் திட்டமாம். அது தொடர்பாக காங்கிரஸுடன் விரைவில் பேசவும் திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதில் ஒரு சிக்கல் மட்டுமே... கமலுக்கு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட திட்டம். அதே தொகுதிதான் திருநாவுக்கரசரும் யோசித்திருக்கிறாராம். அந்த சிக்கலை தவிர்த்தால் கூட்டணி ரெடி என்கிறார்கள் விவரமறிந்த கமல் நண்பர்கள்" - இதுதான் அன்றைய டிஜிட்டல் திண்ணையில் சொன்னது.

ஆனால் இப்போது 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்துவிட்டார் கமல். இடையில் என்ன நடந்தது? விசாரித்தோம்... கமல் கட்சியில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் மூலமாக திருநாவுக்கரசரிடம்தான் பேசியிருக்கிறார்கள். திருநாவுக்கரசரும் உங்களுக்கு ஒரு சீட் நான் பேசி வாங்கி தரேன் என உறுதி கொடுத்திருக்கிறார். திடீரென அவரது பதவி பறிக்கப்பட்டது. கமல் தூதுவராக போன வழக்கறிஞர் உடனடியாக திருநாவுக்கரசருடன் பேசி இருக்கிறார். ' நீங்க கேட்டதை நான் டெல்லியில் சொன்னேன். ஆனால் அங்கே இருந்து எனக்கு எந்த பதிலும் இல்லை. நான் தலைவராக இருந்தால் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பேன். ஆனால் இப்போ வந்து இருக்கும் தலைவர் அதை செய்வாரான்னு எனக்கு தெரியாது. இதை போய் கேளுங்கன்னு நான் அவருகிட்ட சொல்ல முடியாது. சொன்னாலும் கேட்க மாட்டாரு. உடனே சிதம்பரத்துக்கு தகவல் போகும். நான் சொன்னேன் என்பதற்காகவே எல்லாத்தையும் குழப்பி விடுவாங்க. அதனால் இந்த விஷயத்தை இதுக்கு மேல பேசாமல் வேற வழி இருந்தால் பாருங்க' என சொல்லி இருக்கிறார்.

ஆனாலும் கமல் தரப்பில் அத்துடன் ஓயவில்லை. டெல்லியில் உள்ள ஒரு நண்பர் மூலமாக காங்கிரஸ் மேலிட தலைவர் ஒருவரிடம் பேசி விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள். அவரோ, 'கூட்டணியில் திமுக எத்தனை இடம் கொடுக்கும் என்பது தெரியாது. அதனால் அது முடிவானால்தான் நாங்க உங்களுக்கு உதவ முடியுமா என சொல்ல முடியும். அதுவரை வெய்ட் பண்ணுங்க. இல்லைன்னா திமுகவில் நேரடியாகப் பேசி பாருங்க. அவங்க கொடுக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு' என சொல்லி இருக்கிறார். இந்த தகவல் கமலுக்கும் சொல்லப்பட்டு இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கலாமா என்பது வரை கேட்டு இருக்கிறார்கள்.

கமலோ, 'திமுக - அதிமுக வேண்டாம் என்பதுதான் நம் பாலிஸி. ஒரு சீட்டுக்காக திமுகவிடம் போய் கையேந்தி நின்றால் அத்துடன் நாம காணாமல் போய்டுவோம். நம்ம நோக்கம் சட்டமன்றத்தில் கால் பதிப்பதுதான். அதனால் நாடாளுமன்றத்தில் போட்டியிடுவது பற்றியோ ஜெயிப்பது பற்றியோ எந்த யோசனையும் வேண்டாம்.தனித்துப் போட்டின்னு அறிவிப்போம். கடைசி நேரத்தில் யாராவது நமக்கு ஆதரவு கொடுக்க வந்தால் சேர்த்தால் ஏற்றுக் கொள்வோம்" என்று சொல்லி இருக்கிறார். சொன்னதுடன் மட்டுமல்லாது அவரே அறிவித்தும் விட்டார்" என்று முடிந்தது மெசேஜ்.

அதை காப்பி செய்து ஷேர் செய்து விட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

வியாழன் 7 பிப் 2019