மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

இதுல மோடியை அடிச்சுக்க முடியாது: அப்டேட் குமாரு

இதுல மோடியை அடிச்சுக்க முடியாது: அப்டேட் குமாரு

புது போன் வேணும்னா நேரா சிவக்குமார் முன்னால போய் போனை தூக்கிட்டு நிப்பாங்க போல. அவருக்கு தான் செல்ஃபினாலே அலர்ஜியா இருக்கே அவர்ட்ட போய் போனை நீட்டிட்டு உடைஞ்சுருச்சேன்னு அழுதுகிட்டு இருக்காங்க. இந்த மேட்டருல மோடியை நம்மாளுங்க புகழ்ந்து தள்ளுறாங்க. உசுரு போகுற அவசரமா இருந்தாலும் ஒரு செல்ஃபின்னு கேட்டா.., ஏன் ஒரு ஓரமா போனை வச்சுகிட்டு நின்னாலும் என்னை ஒரு போட்டோ எடுங்கன்னு சொல்லி கேட்டு வாங்கிட்டு போவார். சரி எல்லாருமே மோடி மாதிரி இருப்பாங்கன்னு நினைக்குறது மகா முட்டாள் தனம். அப்டேட்டை பாருங்க..

@Kozhiyaar

Pen drive Filesஐ மாற்றுவதை விட, Virusஐ தான் அதிகம் பகிர்கிறது போலும்!!!

@Yuvi_Twitz

//2வது முறையாக ரசிகரின் சொல்போனை தட்டிவிட்டார் நடிகர் சிவக்குமார்.

82வது முறையாக சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை கண்ணாடி விழுந்தத சேஸ் பண்ணிடுவாரோ

@Fazil_Amf

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி - கமலஹாசன்.

சரத்குமார் : வாங்க ஆண்டவரே ஒரு டோக்கனை போட்டு லைன்ல நில்லுங்க .!

@Kozhiyaar

உங்களுக்கு இருந்தால் தன்னம்பிக்கை!!

என்னிடத்தில் இருந்தால் திமிர்!!!

அவ்ளோதான்

@mohanramko

பின்னாடி தட்டுனா ரேடியோ பாடும் என்பதன் லேட்டஸ்ட் வெர்ஷன் தான், ரீ ஸ்டார்ட் பண்ணா சரியாகிடும்...

@mekalapugazh

எப்படி ஸ்டம்ப்பைப் பார்க்காமலேயே பந்தால் ஸ்டம்ப் அடிக்கும் உத்தியில் தோனி பெரிய ஆளோ..அதுபோலத்தான் சிவகுமாரும்..செல்போனைத் தட்டிவிடுவதில்..செம ட்ரைனிங் எடுத்திருப்பார்போல.

@thara_twitz01

ஆதி காலத்துலேந்து இப்ப வரை சொல்றாய்ங்க.. வெளியே போவும் போது எங்க போறேன்னு கேக்க கூடாதாம் போற காரியம் வெளங்காதாம்..

இல்லனா மட்டும் இவிங்க ஜனாதிபதி ஆகிடுவாய்ங்க

@Annaiinpillai

“நான் சினிமா நடிகர் அல்ல; மக்கள் மாற்றத்தை விரும்புவதால் என்னை ஆதரிக்கின்றனர்!” - டிடிவி தினகரன்# நடிகரா இல்லைனாலும் உங்களுக்கு காமெடி நல்லா வருது பாஸ்!

@udhayamass1

“நான் சினிமா நடிகர் அல்ல; மக்கள் மாற்றத்தை விரும்புவதால் என்னை ஆதரிக்கின்றனர்!” - டிடிவி தினகரன்

“அதெல்லாம் சரி.. அத்தை ஜெயிலில் ஷாப்பிங் போனாங்களே அந்த வழக்கு எதோட நிக்குது”

@RahimGazzali

சிவக்குமாருக்கு செல்ஃபோன் மேலே ஏன் அப்படி ஒரு கோபம்ன்னு தெரியல. அவர் எதிரில் போனை நீட்டினாலே தட்டிவிட்டுடறாரு. இந்த விஷயத்தில் மோடியிடம் இருக்கற பெருந்தன்மை இவரிடம் துளியும் இல்லை. மோடியிடம் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

@Thaadikkaran

`பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!’ - எண்ணிக்கை குறைவதாக தகவல்# அதுக்குத்தான் சிவகுமார் செல் போன் யூஸ் பண்ணாதீங்கன்னு தட்டி விட்டார்..!!

@Suyanalavaathi

தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகே கூட்டணி அறிவிப்பேன் - தமாக கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்#

எந்த கட்சி தொண்டர்கள் ட கேப்பாரு!!

@Vicky_stirring

பாஜக கூட்டணியில் எதிர்பார்க்கும் தொகுதி அளிக்காவிட்டால் தனித்து போட்டி. -பாரிவேந்தர்.#

அமிதாப் மாமாவுக்கு கோவம் வந்துருச்சு மொமண்ட்

@Annaiinpillai

பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும். -அமைச்சர் தங்கமணி#

தவழ்ந்து வந்தவரு தான் முடிவு பண்ணனும்னு சொல்லுங்க?!

@ItsJokker

"நியாயம்" என்பது யாதெனில்,

ரோட்டுல நடந்து போறப்ப வண்டி ஓட்டுறவன குறை சொல்றதும்,

வண்டி ஓட்டுறப்ப நடந்து போறவன குறை சொல்றதும் தான்..!!!

@HAJAMYDEENNKS

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்

ஆச்சி மசாலா ஓனர்

லலிதா ஜூவல்லரி ஓனர்

இம்மூவரும் நமக்கு சொல்ல வருவது ஒன்னே ஒன்னுதான்

விளம்பரம் வரும்போது சேனலை மாத்திடுங்க !

@Annaiinpillai

பூஸ்டு, காம்ப்ளான்

குடிச்சு வர தெம்பை விட பர்சுல பணம் இருந்தா வர தெம்பு தான் நிரந்தரமாக தெரிகிறது சாமனியன்களுக்கு!

@aysha_yusuff

"மோடியின் ரசிகர் என்பதால் திருமணம் செய்தேன்; இப்போது சித்ரவதை அனுபவிக்கிறேன்" - கதறும் இளம் பெண்

நாலு வருஷமா நாங்க அனுபவிச்சிட்டு இருக்கிறோமே, இப்படியா அழுகிறோம்..

-லாக் ஆஃப்

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

வியாழன் 7 பிப் 2019