மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

பாஜகவில் போட்டியிடுகிறாரா சேவாக்?

பாஜகவில் போட்டியிடுகிறாரா சேவாக்?

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கை பாஜகவில் போட்டியிட வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 3) ஹரியானாவில் பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்துள்ளது. வரும் மே மாதத்தில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தீபெந்தர் சிங் ஹூடாவைத் தோற்கடிக்க ஹரியானாவின் ரோஹ்தர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கை போட்டியிட வைக்க இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக பொறுப்பாளர் ஒருவர் டி.என்.என். ஊடகத்திடம் இதுகுறித்து பேசுகையில், “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தீபெந்தர் சிங் ஹூடா கடந்த 3 நாடாளுமன்றத் தேர்தலிலும் ரோஹ்தர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவரைத் தோற்கடிக்க அத்தொகுதியில் சேவாக்கை நிறுத்துவது தொடர்பாக ஆலோசித்தோம். சேவாக்கை வேட்பாளராக நிறுத்துவதற்கு பாஜக ஏற்கெனவே திட்டமிட்டுள்ளது. சேவாக்கிடம் இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மூத்த தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்”என்று கூறியுள்ளார்.

ஆனால் பாஜகவின் ஹரியானா மாநிலத் தலைவர் சுபாஷ் பரலா இதை முற்றிலுமாக மறுத்துள்ளார். சேவாக் கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இதுவரையிலும் இணையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஹரியானாவில் மொத்தம் 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதில் கடந்த முறை 7 தொகுதிகளை பாஜக வென்றுள்ளது. ஹிசார் மற்றும் சிர்சா தொகுதிகளில் இந்திய தேசிய லோக் தளமும், ரோஹ்தரில் காங்கிரஸும் வெற்றி பெற்றிருந்தது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 7 பிப் 2019