மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

கூட்டணியால் கறைபடிந்துவிடக் கூடாது: கமல்ஹாசன்

கூட்டணியால்  கறைபடிந்துவிடக்  கூடாது:  கமல்ஹாசன்

கூட்டணி குறித்து விளக்கம் அளித்துள்ள கமல்ஹாசன், “எங்கள் கைகளில் கறை படிந்துவிடக் கூடாது” என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்றும் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு நாட்களாக மக்கள் நீதி மய்யம் கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 7) செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கூட்டணி தொடர்பாக தான் கூறியது குறித்து விளக்கமளித்தார். “திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்காது என்ற தகவல் சரிதான். ஏனெனில் மக்களுக்கு நல்லதை பரிமாற முற்பட்டு இருக்கிறோம். அதற்காக கையைச் சுத்தமாக வைத்திருக்கிறோம். அவசரமாக கைகுலுக்கலில் ஈடுபட்டு கை அழுக்காகி விட வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். அதிமுகவை தனியாகச் சொல்லவில்லை என நினைக்க வேண்டாம். ஆரம்பத்திலிருந்தே அந்தக் கட்சியை எதிர்த்து வருகிறோம். அதிமுகவுடனும் கூட்டணி கிடையாது” என்று தெரிவித்தார்.

அமமுக மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, “நான் சொன்னதன் அர்த்தத்தை நீங்கள் முழுமையாக புரிந்துகொள்ளாமல் மீண்டும் அதே கேள்வியை கேட்கிறீர்கள்.எங்கள் கைகள் சுத்தமாக வைத்திருக்கிறோம் என்னும்போது யாருடன் கைகுலுக்குகிறோம் என்பதை ஜாக்கிரதையாக பார்த்து குலுக்குவோம். கூட்டணியால் எங்கள் கைகள் கறைபடிந்துவிடக் கூடாது” என்று தெரிவித்தார்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 7 பிப் 2019