மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

திருட்டு விசிடி: 3 ஆண்டு சிறை!

திருட்டு விசிடி: 3 ஆண்டு சிறை!

திரைப்படங்களை உரிய அனுமதியின்றி நகலாக்கம் செய்தால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

திருட்டு விசிடி மற்றும் காப்புரிமை மீறல்கள் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் திரைப்படச் சட்டம் 1952-ல் சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, திருட்டு விசிடி வேலைகளில் ஈடுபட்டாலோ, காப்புரிமை மீறல்களில் ஈடுபட்டாலோ மூன்றாண்டு சிறைத்தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளுமே விதிக்கப்படும். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “உரிய அனுமதியின்றி, கலைப்படைப்புகளை தவறான முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகலாக்கம் செய்தால் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இந்த நட்வடிக்கையால் சினிமா தொழில்துறையில் திருட்டுத்தனத்தை கட்டுப்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் திருட்டு விசிடி விவகாரம் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், “தமிழ்ராக்கர்ஸை ஒழிப்போம் என்று கூறித்தான் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பொறுப்புக்கு விஷால் வந்தார். இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்?” என்று கேள்வியெழுப்பினார். மறுநாளே தமிழக முதல்வரை தலைமை செயலகத்தில் சந்தித்த பிறகு நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் கைகாட்டுவது தமிழக அரசைதான். மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் சட்டவிரோத இணையதளங்களை உடனடியாக முடக்கிவிட முடியும். தமிழக அரசை கடவுள் போல நம்பியிருக்கிறோம். தமிழக அரசு நினைத்தால் திருட்டு விசிடியை ஒழித்துவிட முடியும்” என்று தெரிவித்தார்”

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 7 பிப் 2019