மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

பாஜக அழுத்தம்: ட்விட்டர் அதிகாரிகளுக்கு நாடாளுமன்றக் குழு சம்மன்!

பாஜக அழுத்தம்: ட்விட்டர்  அதிகாரிகளுக்கு நாடாளுமன்றக் குழு சம்மன்!

சமூக வலைதளங்களில் மக்களுக்கான உரிமைகள் குறித்து விவாதிக்க, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும், இந்திய ட்விட்டர் வலைதள அதிகாரிகளுக்கும் நாடாளுமன்றக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

டெல்லியில் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அனுராக் தாக்கூர் தலைமையில் நாடாளுமன்றக் குழு ஆலோசனை நடத்தவுள்ளது. இந்த விவகாரத்தில் பொது மக்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அனுராக் தாக்கூர் கேட்டுள்ளார். சமூக வலைதளங்களின் பயன்பாடு, சமூக வலைதளங்களில் மக்களுக்கான உரிமைகள் குறித்த விளக்கத்தை, நாடாளுமன்றக் குழு அதிகாரிகள் ட்விட்டர் அதிகாரிகளிடமும், அரசு அதிகாரிகளிடமும் கேட்டு தெரிந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

ஜனவரி 28ஆம் தேதி, வழக்கறிஞர் இஷ்கரண் சிங் பந்தாரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தார். அப்போது அவர், ட்விட்டரின் ‘பாகுபாடு மற்றும் நியாயமற்ற’ நடைமுறைகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறியுள்ளார். மேலும் உள்துறை அமைச்சரிடம் பந்தாரி கொடுத்த மனுவில், இந்தியா மற்றும் அரசாங்கத்துக்கு ஆதரவான ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றக் குழு கூடவுள்ளதாகக் கூறப்படுகிறது

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 7 பிப் 2019