மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

வாடிக்கையாளரின் பணத்துக்கு வங்கிதான் பொறுப்பு!

வாடிக்கையாளரின் பணத்துக்கு வங்கிதான் பொறுப்பு!

வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடு போனால், அதற்கு வங்கிதான் பொறுப்பு என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவரது வங்கிக் கணக்கிலிருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது. இந்த பணத்தை வங்கி தனக்குத் திருப்பி தர உத்தரவிட வேண்டுமெனக் கோரி, நுகர்வோர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, எஸ்பிஐ வங்கி கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நேற்று(பிப்ரவரி 6) விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார். இதையடுத்து, “மக்களுக்குச் சேவை செய்யவே வங்கிகள் உள்ளன. வாடிக்கையாளரின் நலனைப் பாதுகாப்பது வங்கியின் கடமை. ஒருவரது பணம் சட்டவிரோதமாகத் திருடப்பட்டால், அதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய வங்கிதான் பொறுப்பு ஏற்க வேண்டும். அதனால், பாதிக்கப்பட்ட நபருக்கு வங்கிதான் பணம் கொடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார் நீதிபதி.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 7 பிப் 2019