மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

கோவையில் 8 கிலோ தங்கம் கொள்ளை!

கோவையில் 8 கிலோ தங்கம் கொள்ளை!

கோயம்புத்தூரில் இன்று காலையில் பார்சல் சர்வீஸ் ஊழியரைத் தாக்கி 8 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள நகைக்கடைகளில் உள்ள தங்க நகைகளை விமானத்தில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணியை ஒரு தனியார் பார்சல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இன்று (பிப்ரவரி 7) காலையில் இந்நிறுவனத்தைச் சேர்ந்த பிருத்விசிங் என்ற வாலிபர், காலை 5.30 மணியளவில் 8 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு கோவை விமானநிலையம் சென்றார். பீளமேடு சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரைத் தாக்கினர். கையில் இருந்த 8 கிலோ தங்கத்தைப் பிடுங்கிச் சென்றனர். இது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று பேரும் ஹெல்மெட் அணிந்திருந்ததாக, நகையைப் பறிகொடுத்த பிருத்வி சிங் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

வியாழன் 7 பிப் 2019