மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

ஒரு கப் காபி:

ஒரு கப் காபி:

ஆடையும் ஆளுமையும்!

“கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் ஆடைகளுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறோமோ? முன்பெல்லாம் கிழிந்த ஆடையை அணிந்து செல்வதற்கு வெட்கமாக இருக்கும். ஆனால், இன்றைய ஃபேஷன் கிழிந்த ஆடையைக்கூட உயர்ந்த விலைக்கு வாங்கிப் பெருமையாக உடுத்திக்கொள்ள வைக்கிறது.

காலம் மாறும், காலத்துக்கேற்பப் பார்வைகளும் மாறும். உடை என்பதை மனிதர்கள் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதையே ஸ்டைல், ஃபேஷன் போன்றவையும் காட்டுகின்றன. அளவுகோல்கள் மாறலாம். ஆடை குறித்த கவனம் மாறுவதே இல்லை.

மற்றவர்களைக் கவரும் தன்மை கொண்டது ஆடை. ஆடை, அணிபவர்களுக்கு ஒருவித மன அமைதியைக் கொடுக்கும். நம்மிடம் இருக்கும் ஆடைகள் அனைத்துமே நாம் பார்த்து, பிடித்து வாங்கியவையாக இருக்க முடியாது. நமக்குப் பிடிக்காத சில ஆடைகள் அன்பளிப்பாக வந்திருக்கலாம். சில ஆடைகளை நாமே அவசரத்தில் வாங்கியிருப்போம். இதுபோன்ற ஆடைகளைப் பிடித்து அணிகின்றோம் என்று சொல்ல முடியாது.

நாம் வைத்திருக்கும் பத்து ஆடைகளில் ஐந்து நமக்குப் பிடித்தவையாக இருக்கும். அந்தக் குறிப்பிட்ட ஆடைகளை அணியும்போது இனம்புரியாத மன நிம்மதி, சந்தோஷம் கிடைக்கும். அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருப்போம்.

அப்படியென்றால், நம்மிடம் இருக்கும் பத்து ஆடைகளும் நமக்குப் பிடித்தவையாக இருந்து, அதை மாற்றி மாற்றி அணிந்துகொண்டால் ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும் அல்லவா?

ஆடை என்பது மனதை பாதிக்கும். மன நிலையும் ஆடையில் பிரதிபலிக்கும்.

ஒரு சிலருக்கு ஆடை மீது சென்டிமென்ட் இருக்கும். இது அப்பா எடுத்துக் கொடுத்தது, இதை அணிந்து சென்றால் காரியம் வெற்றியாக முடியும். இது அம்மா எடுத்துக் கொடுத்த ரெட்ஸ், இத்தைதான் தேர்வுக்கு அணிந்து செல்ல வேண்டும், இந்த கலர் நமக்கு ராசி என்றெல்லாம் ஆளுக்கொரு சென்டிமென்ட் இருக்கும். நம்மேல் அதீத அன்பு வைத்தவர்கள் எடுத்துக் கொடுத்த ஆடையை அடிக்கடி அணிவோம். ஒரு சிலர் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட கலர் கொண்ட ஆடையை இந்த நாட்களில்தான் அணிய வேண்டும் எனத் தீர்மானித்து வைத்திருப்பார்கள்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது ஆடை என்பது சாதாரணமான ஒன்றாகத் தெரியும். ஆனால், உண்மையில் ஆடை என்பது வெறும் ஆடை அல்ல. அது நம் மனதின் பிரதிபலிப்பு. ஆடையைப் பார்த்துப் பார்த்துத் தேர்வுசெய்து அணிவது, அலட்சியமாக ஏதோ ஒன்றை அணிவது, இரண்டையும் மாறி மாறிச் செய்வது என எதை எடுத்துக்கொண்டாலும் அது அந்த நபரின் மனதை, ஆளுமையை, இயல்பைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும்.

ஆம். ஆடை என்பது வெறும் ஆடை அல்ல. அது நாமேதான்!

- ச.வினிதா

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 7 பிப் 2019