மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

ஒரே எண் கொண்ட 2 பான் கார்டுகள்!

ஒரே எண் கொண்ட 2 பான் கார்டுகள்!

திருச்சியில் இருவருக்கு ஒரே எண் கொண்ட பான் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

திருச்சி அருகே கீரமங்கலத்தைச் சேந்தவர் சுந்தரம். இவரது மகன் செந்தில் குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார், சமீபத்தில் தனி நபர் கடன் கேட்டு , தான் சேமிப்பு கணக்கு வைத்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விண்ணப்பித்திருக்கிறார். இதையடுத்து குடும்ப அட்டை நகல், ஆதார் எண், பான் எண் ஆகியவற்றை சமர்ப்பித்துள்ளார்.

இதை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த போது செந்தில் குமாரின் பான் எண் அவரது பெயரிலேயே வேறுமுகவரியைக் காண்பித்துள்ளது. இதுகுறித்து வருமான வரித் துறை அலுவலகத்தில் தெரிவிக்க அறிவுறுத்தியதோடு, பான் கார்டை ஆய்வு செய்தபோது கணினியில் வந்த முகவரியை செந்தில் குமாரிடம் காண்பித்துள்ளனர்.

வங்கி அதிகாரிகள் கொடுத்த முகவரிக்கு செந்தில் குமார் சென்று பார்த்த போது அந்த முகவரியில் இருந்தவர் பெயர் செந்தில் குமார் என்பதும், அவருடைய தந்தை பெயரும் சுந்தரம் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்திய போதிலும், இருவருக்கு ஒரே பான் கார்டு என்பதால் ஊதியம் பிடித்தம் உள்ளிட்டவற்றில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், இதனால் ஒரே பான் எண் வழங்கப்பட்டது குறித்து இருவரும் வருமான வரித்துறையிடம் புகார் அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

இதற்கிடையில் நேற்று (பிப்ரவரி 6) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணுடன் பான் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 7 பிப் 2019