மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

3டி படத்தில் பிரபுதேவா

3டி படத்தில் பிரபுதேவா

நடனம் தொடர்பான 3டி படத்தில் வருண் தவானுடன் மீண்டும் இணைந்து பிரபுதேவா நடிக்கவுள்ளார்.

பாலிவுட் நடிகரான வருண் தவானுடன் பிரபுதேவா இணைந்து நடிக்கும் படம் 3டி-யில் உருவாக்கப்படவுள்ளது. ‘ஸ்ட்ரீட் டான்சர்’ என இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. பாலிவுட்டில் நடனம் தொடர்பான படங்களின் வருகை குறைந்துள்ளதால் இப்படத்தை உருவாக்க முயன்றுள்ளனர் படக்குழுவினர். ஏபிசிடி என்ற இந்தி திரைப்படத்தை பிரபுதேவா நடிப்பில் பாலிவுட் நடன இயக்குநரான ரெமோ டிசோசா இயக்கினார். இப்படம் டப்பிங் செய்யப்பட்டு தமிழிலும் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அதன் இரண்டாம் பாகமும் வெளியானது. இரண்டாம் பாகத்தில் பிரபுதேவாவுடன் பாலிவுட் நடிகரான வருண் தவானும் இணைந்து நடித்தார். இந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இயக்குநர் ரெமோ டிசோசா ஸ்ட்ரீட் டான்சர் என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கிறார். கதாநாயகியாக சோனம் பஜ்வா நடிக்கவுள்ளார். இவர் தமிழில் கப்பல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் லண்டனில் நடக்கவுள்ளது.இதில் பிரபுதேவா கலந்துகொள்கிறார். மேலும் இப்படம் 3டி-யில் உருவாக்கப்படுகிறது. பிரபுதேவாவுடன் மீண்டும் நடிப்பது உற்சாகமளிப்பதாக வருண் தவான் தெரிவித்துள்ளார்.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

வியாழன் 7 பிப் 2019