மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

கோடைக் கால குடிநீர்ப் பஞ்சம்: அச்சத்தில் அதிமுக!

கோடைக் கால குடிநீர்ப் பஞ்சம்: அச்சத்தில் அதிமுக!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்த வேண்டுமென அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் விறுவிறுப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாராகிவிடும் என்று தெரிகிறது. இதற்கிடையே தேர்தலை எந்தவித பிரச்சினையுமின்றி சுமுகமாக நடத்துவது தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. வரும் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்றும் ஆறு அல்லது ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் முதல் கட்டமாகவே தமிழகத்தில் தேர்தலை நடத்திட வேண்டுமென அதிமுக வலியுறுத்தியுள்ளது. அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்களவை அதிமுக தலைவர் வேணுகோபால் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் நேற்று (பிப்ரவரி 6) அளித்துள்ள மனுவில், “மே மாதம் வெயில் அதிகமாக இருக்கும் என்பதாலும், வறட்சியின் காரணமாகக் குடிநீர் பற்றாக்குறை நிலவும் என்பதாலும் தமிழகத்தில் முதல் கட்டமாகவே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

வியாழன் 7 பிப் 2019