மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

ஆக்‌ஷனுக்கு உத்தரவாதம் அளிக்கும் ‘அயோக்யா’!

ஆக்‌ஷனுக்கு உத்தரவாதம் அளிக்கும்  ‘அயோக்யா’!

தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பான பிரச்சினைகள், பைரஸி பிரச்சினைகள், இளையராஜா 75 இசை நிகழ்ச்சி என அண்மையில் செய்திகளில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார் விஷால். தற்போது இவர் நடிப்பில் உருவாகிவரும் அயோக்யா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சண்டக்கோழி 2 படத்தைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகவுள்ள அயோக்யா படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்குகிறார். இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

விஷால் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்கான இதில் சண்டைக்காட்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

சண்டைக்கோழி 2 படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறாதபோதும் அதற்கு முன்னர் வெளியான துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன. அந்த வகையில் காவல் துறையை மையமாகக்கொண்டும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டும் இந்தப் படம் உருவாகியுள்ளதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 7 பிப் 2019