மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

மவுலிவாக்கம் விபத்து: கட்டட நிறுவனத்துக்கு உத்தரவு!

மவுலிவாக்கம் விபத்து: கட்டட நிறுவனத்துக்கு உத்தரவு!

சென்னை மவுலிவாக்கத்தில் விபத்துக்குள்ளான கட்டடத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தை இடித்ததற்கான செலவுத் தொகை 1 கோடியே 11 லட்சம் ரூபாயைச் செலுத்தினால் மட்டுமே நிலத்தை ஒப்படைக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சென்னை மவுலிவாக்கத்தில் 103 சென்ட் பரப்பில் 86 வீடுகளைக் கொண்ட இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டியது பிரைம் சிருஷ்டி என்ற தனியார் கட்டுமான நிறுவனம். 2014 ஜூன் 28ஆம் தேதியன்று ஒரு கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 61 பணியாளர்கள் பலியாகினர். 27 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து, அந்த நிலமானது காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தியது. விதிமீறல் காரணமாகவே கட்டடம் இடிந்து விழுந்ததாகவும், 50 மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டடமும் பாதுகாப்பற்று இருப்பதாகவும், அதையும் இடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை ஏற்று மற்றொரு கட்டடத்தை இடிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்படி, மாவட்ட ஆட்சியருக்குத் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பிரைம் சிருஷ்டி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டடத்தை இடிக்க அனுமதியளித்ததுடன், அதற்கான செலவுத் தொகையை அந்நிறுவனத்திடம் வசூலித்துவிட்டு நிலத்தை மீண்டும் ஒப்படைக்கலாம் என்று உத்தரவிட்டது. இதன்படி, கடந்த 2016 நவம்பர் மாதம் அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டது. இதன் பின்னர், கட்டடம் இடிக்கப்பட்டதற்கான செலவு மற்றும் ஆலோசனைக் கட்டணமாக 1 கோடியே 11 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், தொகையைச் செலுத்தினால் நிலம் ஒப்படைக்கப்படும் எனவும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், பிரைம் சிருஷ்டி நிறுவனம் ஆகியவற்றுக்குக் கடிதம் அனுப்பியது.

ஏற்கனவே முன்வைப்புத் தொகை, கட்டட அனுமதிக்கான கட்டணம் என 1 கோடியே 12 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளதாகக் கூறி, கட்டடம் அமைந்திருந்த நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, பிரைம் சிருஷ்டி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.மனோகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று (பிப்ரவரி 6) இந்த வழக்கை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு விசாரித்தது.

“கட்டட அனுமதிக்காகவே 1 கோடியே 12 லட்சத்தை மனுதாரர் செலுத்தியுள்ளார். விதிமீறிக் கட்டியதால் அந்தத் தொகை பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. அதைத் திரும்பக் கேட்க மனுதாரருக்கு உரிமையில்லை” என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

வியாழன் 7 பிப் 2019