மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

சட்டவிரோத பேனர்கள்: அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ்!

சட்டவிரோத பேனர்கள்: அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ்!

தடையை மீறி பேனர்கள் வைத்ததாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும், தமிழகத் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்பச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஜெ நினைவு தினம், கலைஞர் சிலை திறப்பு விழா ஆகியவற்றுக்காக அந்தந்த அரசியல் கட்சிகளால் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களை அகற்ற வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்க இடைக்கால தடை விதித்து 2018 டிசம்பர் 20ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், அமமுக ஆகிய கட்சிகள் மதிக்கவில்லை எனக் கூறி, அந்தக் கட்சியினர் மீது டிராஃபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன் நேற்று (பிப்ரவரி 6) விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக்கை தொடர்பான வழக்கு வரும் 13ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் கோரப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், அமமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும், தமிழகத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

வியாழன் 7 பிப் 2019