மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

ஏப்ரலில் விஜயகாந்த் பிரச்சாரம்: சுதீஷ்

ஏப்ரலில் விஜயகாந்த் பிரச்சாரம்: சுதீஷ்

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வரும் ஏப்ரல், மே மாதங்களில் 50 நாட்கள் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைக் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவுடன் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் இணைந்து தேர்தலைச் சந்திப்பது உறுதியாகியுள்ளது. அதிமுக சார்பில் பேச்சுவார்த்தை தொடந்துவருகிறது. அதிமுகவுடன் பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மறைமுகமாக பேசிவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில வாரங்களில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தமிழகத்தில் இறுதிச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தலைமையில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் நேற்று (பிப்ரவரி 5) செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், “தேமுதிக எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அது வலிமையானதாகவே இருக்கும். கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சிகிச்சை முடிந்து இம்மாத இறுதியில் விஜயகாந்த் தமிழகம் வர இருக்கிறார். அவர் வந்த பிறகுதான் கூட்டணி இறுதி செய்யப்படும். தேமுதிக இருக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவாரா என்ற கேள்விக்கு, “இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அநேகமாக வரும் ஏப்ரல் முதல் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்குத் தயார் செய்துவருகிறோம். ஏப்ரல், மே இரண்டு மாதங்களிலும் சுமார் 50 நாட்கள் வரை பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்” என்று பதிலளித்தார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019