மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

அரசியல்தான் பேசினோம்: திருநாவுக்கரசர், அரசியல் நோக்கமில்லை: ரஜினி

அரசியல்தான் பேசினோம்: திருநாவுக்கரசர், அரசியல் நோக்கமில்லை: ரஜினி

ரஜினிகாந்துடன் அரசியல்தான் பேசினேன் என்று திருநாவுக்கரசர் தெரிவித்திருந்த நிலையில், சந்திப்பில் அரசியல் நோக்கம் எதுவுமில்லை என்று ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரிலுள்ள திருநாவுக்கரசரின் இல்லத்துக்கு இன்று (பிப்ரவரி 6) விசிக தலைவர் திருமாவளவன் வருகை தந்து ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் கலந்துகொண்டதற்காக நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்தார் நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் சவுந்தர்யா திருமண அழைப்பிதழை திருநாவுக்கரசரிடம் வழங்கி, திருமணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். சந்திப்பின்போது ரஜினிக்கு திருமாவளவன் பொன்னாடை அணிவித்தார். அரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்தும் பேசியுள்ளனர். தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட்ட நிலையில் ரஜினி சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னுடைய 40 ஆண்டுகால நெருங்கிய நண்பர். அவருடைய மகள் சவுந்தர்யாவுக்கு வரும் 11ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதால், அதற்கான அழைப்பிதழ் வைக்க என்னுடைய இல்லத்திற்கு வந்தார். நீண்ட நாட்கள் கழித்து பார்த்ததால் தமிழக நிலவரங்கள், அரசியல் சூழ்நிலைகள், நாட்டு நடப்புகள் குறித்து பேசினோம். குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்று தெரிவித்தார்.

தான் அமெரிக்காவில் ரஜினியை சந்திக்கவில்லை எனவும், அமெரிக்காவில்தான் சென்று சந்திக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்றும் விளக்கம் அளித்த திருநாவுக்கரசர், “கட்சி தொடங்கினாலும் தொடங்காவிட்டாலும் ரஜினிகாந்த் மக்களால் மதிக்கப்படக்கூடிய ஒரு தலைவர்தான். ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என்று கூறி ஆரம்ப காலத்திலிருந்தே அரசியல் பேசி வருகிறார். சினிமாவிலும் அரசியல் பேசி வருகிறார். ஆகவே அவரும் அரசியல் தலைவர்தான். நானும் அரசியல் தலைவர்தான். இரண்டு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது அரசியல் பேசாமல் வேறென்ன பேசுவது” என்று கேள்வியும் எழுப்பினார்.

மேலும், “கட்சி ஆரம்பிப்பது குறித்த கேள்வியை ரஜினியிடம்தான் கேட்க வேண்டும். அவர் கட்சி ஆரம்பித்தால் என்னை அழைக்க மாட்டார். நான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன். ராகுல் பிரதமராக வருவதற்கு எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் விளக்கம்

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019