மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

திருப்பூர் வரும் மோடிக்கு கருப்புக்கொடி: வைகோ

திருப்பூர் வரும் மோடிக்கு  கருப்புக்கொடி: வைகோ

பிப்ரவரி 10ல் திருப்பூருக்கும், பிப்ரவரி 19ல் கன்னியாகுமரிக்கும் வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

2014ல், ஜனவரி 1ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அடுத்த பிரதமர் மோடிதான் என்று முதன் முதலில் கூறினார். ஆனால் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். 2014 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றது முதல் கடந்த நான்கரை ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கின்றது. அரசியல் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து வரும் பாஜக அரசு நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்துள்ளது என்று கூறியிருந்த வைகோ மோடி எப்போது தமிழகத்துக்கு வந்தாலும் கருப்பு கொடி காட்டப்படும் என தெரிவித்திருந்தார்.

அதுபோன்று எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு மதுரை வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் பேருந்து நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்தநிலையில் திருப்பூரில் பிப்ரவரி 10ஆம் தேதி நடக்கவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ, ”மத சகிப்பின்மை, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு எனும் பெயரால் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், இந்தி திணிப்பு, அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தோர் நியமனம், திட்டக்குழு கலைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் மூலம் மாநில உரிமைகள் பறிப்பு, அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் மத்திய அமைப்புகளின் சீர்குலைவு போன்றவை நாடு பாசிசத்தின் கோரப் பிடியில் போய்க்கொண்டிருப்பதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடி அரசின் செயல்பாடுகளால் தமிழகம் எல்லா வகையிலும் வஞ்சிக்கப்பட்டு வருவதை எவராலும் மறுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள வைகோ, ”பாஜக. அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வருவது அவரது உரிமை. ஆனால் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்து வரும் பிரதமர், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் கருப்புக்கொடி காட்டுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

புதன் 6 பிப் 2019