மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

சபரிமலையில் பெண்கள்: தேவசம் போர்டு சம்மதம்!

சபரிமலையில் பெண்கள்: தேவசம் போர்டு சம்மதம்!

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றவுள்ளதாகத் திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி, பல்வேறு தரப்பினர் சார்பில் 56 சீராய்வு மனு, 4 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று (பிப்ரவரி 6) காலை 10.30 மணியளவில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஓய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நாயர் சேவா சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசரண் ஆஜரானார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று அவர் வாதாடினார். “சபரிமலையில் குறிப்பிட்ட வயதுப் பெண்கள் செல்லக்கூடாது என்பது தீண்டாமையோ, சாதி மதப் பாகுபாடோ இல்லை. அது கோயில் மரபு. மத நம்பிக்கை காரணமாகவே பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. உரிய கோயில் மரபுகளைப் பின்பற்றி யார் வேண்டுமானாலும் தரிசனத்துக்கு வரலாம்” என்று அவர் தன் வாதத்தில் குறிப்பிட்டார்.

வெறும் தீண்டாமையை மட்டும் கருத்தில் வைத்து தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும், பலவற்றை அலசி ஆராய்ந்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும் நீதிபதி நாரிமன் கூறினார்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க, திருவாங்கூர் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்தது. வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களைச் சேர்த்து கொள்ளும் வகையில் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தேவசம் போர்டு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019