மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

தோல்வியில் தொடங்கிய இந்திய அணி!

தோல்வியில் தொடங்கிய இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பரிதாபகரமாக தோல்வியைத் தழுவியது.

ஐசிசி கிரிக்கெட்டில் டி20 போட்டிகள் தொடங்கப்பட்ட பின் 2007ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக 10 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இரண்டு போட்டிகளில் மட்டும் தான் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் தனது முதல் வெற்றியை 2017ஆம் ஆண்டு தான் இந்திய அணி பதிவு செய்தது. பத்து ஆண்டுகள் தோல்வியையே பெற்றுவந்த இந்திய அணிக்கு இன்றும் தோல்வியே கிடைத்துள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. நியூசிலாந்து வீரர்கள் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணியின் ரன்ரேட் ஆரம்பம் முதலே பத்துக்கு மேல் இருந்து வந்தது. தொடக்க வீரர் டிம் செய்ஃபெர்ட் 43 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு சிக்சர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். 20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.

220 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா 1 ரன் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவன் 18 பந்துகளில் 29 ரன்களும் விஜய் ஷங்கர் 18 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதற்குப் பின்னர் வந்த வீரர்களில் நிதானமாக ஆடிய தோனி 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். க்ருனல் பாண்ட்யா கடைசி நேரத்தில் 20 ரன்கள் அடித்தார்.

மற்றவீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர். 19.2 ஓவரில் இந்திய அணி 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னணியில் இருக்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி பிப்ரவரி 8ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019