மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

ரிசர்வ் வங்கி: நிர்வாகக் குழு கூட்டம் ஒத்திவைப்பு!

ரிசர்வ் வங்கி: நிர்வாகக் குழு கூட்டம் ஒத்திவைப்பு!

ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் பிப்ரவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சரும் பங்கேற்க இருந்தார். இக்கூட்டம் பிப்ரவரி 9ஆம் தேதியன்று நடக்கவிருந்தது. இந்நிலையில் இக்கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால லாபப்பங்கை வழங்கும்படி மத்திய அரசு விடுத்துள்ள கோரிக்கை குறித்து நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

கடந்த நிதியாண்டில் ரூ.10,000 கோடியை இடைக்கால லாபப்பங்காக மத்திய அரசிடம் ரிசர்வ் வங்கி செலுத்தியது. நடப்பு நிதியாண்டுக்காக ஏற்கெனவே ரூ.40,000 கோடியை ரிசர்வ் வங்கி செலுத்திவிட்டது. ரிசர்வ் வங்கி வழங்கும் லாபப்பங்கை, மத்திய அரசு தனது நிதிப் பற்றாக்குறையை சந்திக்க பயன்படுத்திக்கொள்கிறது. 2019-20ஆம் ஆண்டுக்கு 3.4 விழுக்காடு நிதிப்பற்றாக்குறை இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019