மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

சின்னதம்பிக்கும் பிரபுவுக்கும் என்ன கனெக்‌ஷன்: அப்டேட் குமாரு

சின்னதம்பிக்கும் பிரபுவுக்கும் என்ன கனெக்‌ஷன்: அப்டேட் குமாரு

தேர்தல் நெருங்குன உடனே கட்சிக்காரங்க கூட்டணியை பத்தி கவலைப்படுறாங்களோ இல்லையோ இந்த மீம் கிரியேட்டர்ஸ்லாம் அதுக்குள்ள கூட்டணி கணக்கு போட்டுகிட்டு இருக்காங்க. என்னப்பா நீங்களும் போட்டி போடப் போறீங்களான்னு கேட்டா.. யார் யார் எந்த பக்கம் போவாங்க, இதுக்கு முன்னால அந்தக் கட்சியை பத்தி என்ன பேசியிருக்காங்கன்னு லிஸ்ட் எடுத்தாதான் அதுக்கு ஏத்த மாதிரி மீம் போட்டு லைக்ஸ் வாங்க முடியும்னு சொல்றாங்க. ‘அது வேற வாயி, இது நாற வாயி’ன்னு வடிவேலு பேசுற டெம்ளேட் இருந்தா கொடுங்கன்னு என்ட்டயே கேட்குறாங்க. இது எந்தக் கட்சிக்குனாலும் மேட்ச் ஆகும்ங்றதால அதுக்கு மவுசு அதிகமா இருக்கு.. அப்டேட்டை பாருங்க..

@SkSoundhar

கருப்புக்கொடி காட்டிய ஒவ்வொருவருக்கும் பதிலடி உண்டு.

- நிர்மலா சீதாராமன். #

வருமான வரித்துறையை வச்சு தானே.!

@sultan_Twitz

திமுக ஆட்சியில் டிவி எங்க தாத்தா கொடுத்தார், எங்க அப்பா செட் டாப் பாக்ஸ் தருவார்! - உதயநிதி ஸ்டாலின் #

அப்போ அதுக்கு அடுத்து நீங்க ரீமோட் குடுப்பீங்களோ சாரே..?!

@shivaas_twitz

உதவி:

பழைய தமிழ் சினிமாக்களில் ஒரு ஆபீஸ் காட்டுவாங்க...

கடிகாரத்தில் சரியா 5 மணி ஆனதும், அந்த ஆபீஸ்ல வேலை செய்ற எல்லாரும் ஃபைலை மூடி வச்சிட்டு வீட்டுக்கு கிளம்புவாங்க...

அது போன்றதொரு நிறுவனத்தில், பணி காலியிடம் இருப்பின் தகவல் தெரிவிக்கவும்...

@anand17m

பெத்தவங்களுக்கு அடிக்கடி போன் பண்ணுங்க.... பேச ஒண்ணும் இல்லாட்டியும் கேட்க.. நிறைய இருக்கும்....

@Kozhiyaar

உன்னை நித்தம் நியாபகப் படுத்துகிறதடி காலையில் நீ கொடுத்த நெஞ்சை கரிக்கும் தேங்காய் சட்னி!!!

@parveenyunus

தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பாஜக நுழையும் - ஹெச்.ராஜா #

செயின்ட் ஜார்ஜ் கோட்டையை தவிர..!

@RahimGazzali

தலைவராக இருந்ததை விட இப்பத்தான் டபுள் சந்தோஷம்!- திருநாவுக்கரசர்

ஒருவேளை இன்னொரு கட்சிக்குப்போனால் சந்தோஷம் மும்மடங்காகுமோ?!

@itz_azha

சீக்கரமா போகனும்னு முன்னாடி நிக்கற பஸ்ல ஓடி போயி ஏறுனா, பின்னாடி நின்ன பஸ் வேகமா முன்னாடி சேஸ் பண்ணிட்டு போறது எல்லாம் என்ன டிசைனோ

@HAJAMYDEENNKS

எடப்பாடி முதல்வர் ஆனது மாதிரி ஒரு பயங்கர அதிர்ச்சியளிக்கும் ஆச்சர்யமான சம்பவம் அன்பே சிவம் படத்தின் இயக்குனர் சுந்தர் சி என்பது !

@itz_azha

மகாத்மா காந்தி உருவபொம்மையை சுட்ட இந்து மகா சபாவை சேர்ந்த பூஜா பாண்டே கைது - செய்தி

பூஜா : வழக்கம் போல கையில பச்ச குத்திட்டு சுட்ருக்கலாமோ!!!

@Annaiinpillai

மாலை நேரத்தில் ஒரு கையில் கரண்டி இன்னொரு கையில் ரிமோட் என மல்டிப்பில் பர்சானலிட்டியாக வீட்டிற்குள் வலம் வருகிறார்

அம்மா

@amuduarattai

தமிழகத்தில் பாஜக கதவுகள் கூட்டணிக்காக திறந்தே உள்ளன. -முரளிதரராவ்.

திறந்த கதவு வழியா காத்து மட்டும் தான் வருதா.!?

@Vicky_stirring

திமுக ஆட்சியில் டிவி எங்க தாத்தா கொடுத்தார், எங்க அப்பா செட் டாப் பாக்ஸ் தருவார்! - உதயநிதி ஸ்டாலின் #

பாஸ் கரண்ட் யாரு கொடுப்பாங்க ??

@Annaiinpillai

'பணமதிப்பிழப்புக்குப்பின் வேலையின்மை விவரங்கள் அரசிடம் இல்லை. -மத்தியஅமைச்சர் அறிவிப்பு# சரி அப்ப பக்கோடா கடை போட்ட விபரத்தையாவது கொடுங்க சாரே!

@iParisal

சேனல் நிருபர்: ‘சின்னத்தம்பினு யானைக்குப் பேர் வெச்சிருக்காங்க.. அதப்பத்தி உங்க கருத்து?’

பிரபு: ‘நான் சின்னத்தம்பினு படத்துல நடிச்சேன். என் பையன் கும்கினு ஒரு படம் நடிச்சாரு. அவ்ளோ ஏன் எங்கப்பா பேரே கணேசன்தானே!’

@TharasuShyam

அதிமுகவுக்கு பாமக எதிரி கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்

ரைட்டு...புரிஞ்சிருச்சு!

-லாக் ஆஃப்

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019