மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

பெருமாள் சிலை தடை வழக்கு: தள்ளுபடி!

பெருமாள் சிலை தடை வழக்கு: தள்ளுபடி!

ஒரே கல்லால் ஆன பிரம்மாண்ட பெருமாள் சிலையைப் பெங்களூருவுக்குக் கொண்டு செல்லத் தடை விதிக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் 350 டன் எடையுள்ள விஷ்ணு பெருமாள் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. பெங்களூரு ஈஜிபுரா எனும் இடத்தில் நிறுவுவதற்காக, கடந்த டிசம்பர் 7ஆம் தேதியன்று இச்சிலையை எடுத்துச் செல்லும் முயற்சிகள் தொடங்கின. இந்த சிலை கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது. கொரக்கோட்டையில் இருந்து கிளம்பியது முதல் தற்போது வரை இச்சிலையைக் கொண்டு செல்லும் இடங்களில் எல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது.

ராட்சத லாரியில் பிரம்மாண்ட சிலையைக் கொண்டு சென்றபோது ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வது தொடர்பாகத் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, திண்டிவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பூபால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வில், இன்று (பிப்ரவரி 6) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சிலை கொண்டுசெல்வதற்காக இடிக்கப்பட்ட வீடுகளுக்கு உறுதியளித்தபடி இழப்பீடுகள் ஏதும் வழங்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிலை கொண்டு செல்வதால் மனுதாரர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினர். அவர் பாதிக்கப்பட்ட நபர் அல்ல என்று குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்த பொது நல வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019