மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

பிரியங்காவை ரகசியமாக படம் பிடித்தது யார்?

பிரியங்காவை ரகசியமாக படம் பிடித்தது யார்?

தன்னை யார் படம் பிடித்தது என்ற ரகசியத்தை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார்.

பிரியங்கா சோப்ராவுக்கும் நிக் ஜோனஸுக்கும் திருமணம் முடிந்த பிறகு இருவரின் புகைப்படங்களும் இண்டெர்நெட்டில் வைரஸ் போல பரவி வருகிறது. இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களையும், ரொமாண்டிக் தருணங்களையும் அவர்களே படம்பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அண்மையில் கலிபோர்னியாவில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் மீது சாய்ந்துகொண்டு உறங்குவது போன்ற ஒரு படத்தை பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஹோம்’ என தலைப்பிட்டு பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கூர்மையாக ஆய்வு செய்த நமது நெட்டிசன்கள் அவர்கள் பாணியிலேயே ஒரு புதிய கேள்வியுடன் எழுந்துள்ளனர்.

இருவரும் தனியாக இருக்கும் சமயத்தில் அவர்களது அறைக்குள் நுழைந்து யார் இந்தப் புகைப்படத்தை பிடித்தது என்பதே நெட்டிசன்களின் கேள்வி. சிலர் ஜான் சீனாதான் இப்படத்தை பிடித்திருப்பார் என்று கருத்துகளை தெரிவித்தனர். இப்படி அனைவரும் கேள்வியெழுப்பி, கடைசியில் அவர்களது புகைப்படம் கிண்டல்களுக்கு ஆளானது. இதற்கு விளக்கமளித்த பிரியங்கா சோப்ரா, “நீங்கள் உங்களது நண்பர்களுடன் வெளியே செல்லும்போது அழகான தருணங்களை மற்ற நண்பர் படம்பிடிப்பதில்லையா? அதுபோல நாங்கள் எட்டு பேர் அமர்ந்திருந்து தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தபோது நான் உறங்கிவிட்டேன். அப்போது என்னை எனது சகோதரி திவ்யா படம்பிடித்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019