மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

அண்ணா பல்கலை. உத்தரவுக்குத் தடை!

அண்ணா பல்கலை. உத்தரவுக்குத் தடை!

பேராசிரியர்களின் அசல் கல்விச் சான்றிதழ்களை,அவர்களிடமே பொறியியல் கல்லூரிகள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் விதித்த உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

“தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் அசல் சான்றிதழ்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். சான்றிதழ் நகல்களை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று கடந்த டிசம்பர் 4ஆம் தேதியன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். “பேராசிரியர்களிடம் சான்றிதழ்களைத் திரும்ப ஒப்படைக்கும்போது, கல்வியாண்டின் பாதியிலேயே அவர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாறிவிடக்கூடும். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். அது மட்டுமல்லாமல், பொறியியல் கல்லூரிகளை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஆய்வு செய்யும்போது, பேராசிரியர்களின் சான்றிதழ்களைக் காட்ட வேண்டியிருக்கும். நாட்டிலுள்ள 8 மாநிலங்களில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதாகவும், 9 ஆயிரத்து 60 போலி ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், சான்றிதழை பெற வேண்டுமென ஏ.ஐ.சி.டி.இ. அறுவுறுத்தும் நிலையில் அதற்கு முரணாக அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும், அவ்வாறு சுற்றறிக்கை அனுப்ப அதிகாரம் இல்லை எனவும்” கூறினார்.

இந்த மனுவை இன்று (பிப்ரவரி 6) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழக உத்தரவுக்கு இரண்டு வாரம் இடைக்காலத் தடை விதித்தது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019