மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

செல்போன் திருட்டைத் தடுக்கப் புதிய செயலி!

செல்போன் திருட்டைத் தடுக்கப் புதிய செயலி!

தேசிய அளவில் செல்போன் திருட்டைத் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘டிஜிகாப்’ செயலியை அறிமுகம் செய்தார் சென்னை பெருநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 6) டிஜிகாப் செயலி அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார். சிசிடிவி தொடர்பான விழிப்புணர்வு சிடியை காவல்ஆணையரிடமிருந்து விஜய் சேதுபதி பெற்றுக்கொண்டார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த செயலி மூலம் காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி குறையும் என்று கூறினார்.

இதையடுத்து காவல் ஆணையர் விஸ்வநாதன் பேசுகையில், 18,000 செல்போன்களின் தகவல் இந்த டிஜிகாப் செயலியில் உள்ளதாகத் தெரிவித்தார். “பழைய செல்போன் வாங்கும்போது அது திருடப்பட்ட செல்போனா என்பதை அறிய முடியும். செல்போன் திருட்டைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. திருடு போன செல்போன்கள் மீட்கப்பட்ட பின்னர், அதன் தகவல்களை டிஜிகாப் செயலி மூலம் அறியலாம்.

டிஜிகாப் செயலிக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துதான் திருடு போன செல்போன்களை விற்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசினார் விஸ்வநாதன். சிசிடிவி பொருத்த வேண்டியதன் அவசியம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், சென்னையில் ஆயிரக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதில் மக்களின் பங்களிப்பு உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019