மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது: அப்சரா

பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது: அப்சரா

பெண்களை இழிவுபடுத்தும் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டதாக மகிளா காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச் செயலாளர் அப்சரா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை அப்சரா நேற்று (பிப்ரவரி 5) மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். புதுச்சேரி மாநில சட்டமன்ற அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளராக அப்சரா நியமிக்கப்பட்டதற்காக அவருக்கு சால்வை அணிவித்து நாராயணசாமி வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

புதுவை முதல்வருடனான சந்திப்பின்போது அப்சரா செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெண்களை இழிவாகப் பேசுகிற பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. புதுச்சேரி, தமிழகம் உட்பட நாடு முழுவதும் பாஜக அரசை அகற்ற வேண்டும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதற்காக நாங்கள் பாடுபடுவோம். கட்சியின் ஒவ்வோர் அடிமட்டத் தொண்டர்களும், மகிளா காங்கிரஸ் உறுப்பினர்களும் இதற்காகச் செயல்படுவோம். மகிளா காங்கிரஸை புதுச்சேரியில் வலுப்படுத்துவதற்காக நான் இன்று இங்கு வந்திருக்கிறேன்” என்றார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019